[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்
  • BREAKING-NEWS காவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நெஞ்சுவலி காரணமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

பள்ளி மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமான ஆட்டோ ஓட்டுநர் கைது

auto-driver-arrested-in-sexual-harassment-case

வேலூர் அருகே பள்ளி மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமான ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த  எருக்கம்பட்டு பகுதியை சேர்ந்தவர் புருசோத்தமன்.  ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவர் தனது தங்கையையும், அதே  பகுதியை சேர்ந்த  தங்கையின்  வகுப்பு  தோழியான  மற்றொரு மாணவியையும்  தனது சொந்த ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்து செல்வது  வழக்கம். மாணவிகள் இருவரும் அருகில் உள்ள அரசு  பள்ளியில்  12-ம் வகுப்பு  படித்து  வருகின்றனர். அப்போது அந்த மாணவிக்கும் புருசோத்தமனுக்கும் நாளடைவில் காதல் உருவாகியிருக்கிறது. இதனையடுத்து இருவரும் வீட்டிற்கு தெரியாமல் சில இடங்களுக்கு சென்று வந்திருக்கின்றனர். இந்தநிலையில் மாணவி கர்ப்பம் அடைந்தார். இந்த விவரத்தை மாணவி புருசோத்தமனிடம் கூற, யாருக்கும் தெரியாமல் கருவை கலைத்துவிடலாம் என கூறியிருக்கிறார். அதன்படி கருக்கலைப்பு செய்ய முயற்சி செய்திருக்கின்றனர். ஆனால் அதற்குள் மாணவியின் மீது சந்தேகப்பட்ட அவரின் பெற்றோர்கள் அவரிடம் தீவிர விசாரணை நடத்த, விவரம் முழுவதை பெற்றோரிடம் கொட்டியிருக்கிறார் அந்த மாணவி. இதனைக் கேட்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இதுகுறித்து  குடியாத்தம்  அனைத்து  மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் தாயார் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில்  அந்தக்  கிராமத்திற்கு  சென்ற ஆய்வாளர்  அன்பரசி, ஆட்டோ  ஓட்டுநர்  புருசோத்தமனை அழைத்து  விசாரித்தார். அப்போது அனைத்து  தகவலையும்  ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் அவர் மீது பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீசார் கைது  செய்தனர்.

குடியாத்தம் பகுதியில் இந்தாண்டு பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் இதுவரை 5 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பள்ளி மற்றும் கல்லூரி பயிலும் மாணவிகளுக்கு அதிகப்படியான பாலியல் விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்  என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close