[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்
  • BREAKING-NEWS பிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மதியம் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மைய
  • BREAKING-NEWS மேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்
  • BREAKING-NEWS கோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்
  • BREAKING-NEWS மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை மற்றும் புறநகர் பகுதியின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை

சிவசேனா பிரமுகரைக் கொன்றது எப்படி? கொலைகார மனைவியின் திடுக் திட்டம்!

shiv-sena-leader-shailesh-nimse-s-wife-plots-his-murder

சிவசேனா கட்சியின் தலைவரை கொன்றது எப்படி என்று அவர் மனைவி போலீசில் விளக்கம் அளித்துள்ளார்.

மகாராஷ்ட்ரா மாநிலம் தானே அருகிலுள்ள பிவண்டி பகுதியின் அகாய்யை சேர்ந்தவர் சைலேஷ் நிம்சே (44). சகாபூர் தாலுகா சிவசேனா கட்சித் தலைவராக இருந்தார். இவர் மனைவி சாக்‌ஷி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த 20-ம் தேதி சைலேஷின் உடல் அந்தப் பகுதியில் இருந்து பத்து கி.மீ தூரத்தில் உள்ள காட்டுக்குள், பாதி எரிந்த நிலையில் கிடந்தது. அருகில் அவர் கார் தனியாக நின்றது. போலீசார் அவர் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விசாரணையை தொடங்கினர். 

மனைவி சாக்‌ஷியிடம் கேட்டபோது, 19-ம் தேதி இரவு வரை என்னுடன் பேசிக் கொண்டிருந்தார். அதற்கு பிறகு போன் வந்தது என்று வெளியே சென்றார். காலையில் எழுந்த பார்த்தபோது அவர் இங்கில்லை என்று தெரிவித்தார். பிறகு வீட்டின் ஓர் அறைக்குள் அவரது பிள்ளைகள் தூங்கிக் கொண்டிருந்தன. அந்த அறை வெளியே பூட்டப்பட்டிருந்தது. இதைப் பார்த்ததும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் அவரிடம் உடலை அடையாளம் காட்டச் சொன்னபோது, உடலைப் பார்க்காமலேயே அது தனது கணவர்தான் என்று தெரிவித்துள்ளார் சாக்‌ஷி. 

பின்னர், அவர் இருக்கும் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை சோதித்தனர். அப்போது சைலேஷின் காரை வேறு ஒருவர் ஓட்டிச் சென்றது தெரிய வந்தது. அவர் யார் என்பதை அந்தப் பகுதியில் உள்ளவர்களுடன் விசாரித்தனர். அது சாக்‌ஷியின் உறவினர் பிரமோத் என்பது தெரியவந்தது. அவரைப் பிடித்து விசாரித்த போது உண்மையை ஒப்புக்கொண்டார்.

கொல்லப்பட்ட சைலேஷ் நிம்சேவுக்கு இன்னொரு பெண்ணுடன் காதல். மனைவியை பிரிந்துவிட்டு காதலியுடன் வாழ முடிவு செய்தார். இதுபற்றி சாக்‌ஷியிடம் அவர் அடிக்கடி பேசி வந்துள்ளார். அவர் கொல்லப்படுவதற்கு சில நாட்களுக்கு முன், விவாகரத்துக்காகக் கையெழுத்துப் போடச் சொன்னார். மறுத்தார் சாக்‌ஷி. பிள்ளைகளையும் அவரையும் தனியாக விட்டுவிட்டு சென்றுவிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார் சைலேஷ். வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து தன்னை தவிக்கவிட்டுச் செல்லும் அவரை கொல்ல முடிவு செய்தார் சாக்‌ஷி. இந்தத் திட்டத்தை உறவினர் பிரமோத்திடம் தெரிவித்தார். அவர் கூலிப்படையை ஏற்பாடு செய்தார். கூலிப்படைக்கு ரூ. 1.5 லட்சம் சம்பளமாகப் பேசப்பட்டது. சம்பவம் நடந்த அன்று நள்ளிரவில் கூலிப்படையினர், அவரது வீட்டின் அருகில் காத்திருந்தனர். வீட்டுக்குள் லைட் அணைக்கப்பட்டது. இதுதான் கூலிப்படைக்கு சிக்னல். பின்னர் வீட்டுக்குள் நுழைந்த அவர்கள் கைலேஷை துடி துடிக்கக் கொன்றனர். பின்னர் உடலை தூக்கிக் கொண்டு வந்து அவர் காரிலேயே காட்டுக்குள் கொண்டு சென்றனர். அங்கு எரித்துள்ளனர். பின்னர் ஒன்றும் தெரியாதது போல காரை அங்கேயே விட்டுவிட்டு டூவீலரில் திரும்பியுள்ளனர்.

இதை போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சாக்‌ஷியும் அவர் உறவினரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தொடர்புடைய மேலும் இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close