[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவிக்கு ப்ரியங்கா காந்தி தகுதியானவர்தான் - திருமாவளவன்
  • BREAKING-NEWS கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தன் மீது களங்கம் ஏற்படுத்தியதாக கூறி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் ரூ.1.10 கோடி கேட்டு உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்
  • BREAKING-NEWS வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே

கண்டித்த தந்தை: சாப்பாட்டில் விஷம் வைத்து கொன்ற மகள்..!

daughter-killed-father-in-ramanathapuram

தகாத உறவை கண்டித்த தந்தையை மகளே விஷம் வைத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா. வயது 52. நல்ல உடல் நிலையில் இருந்த இவர் திடீரென இரண்டு தினங்களுக்கு முன் உயிரிழந்தார். இதனால் கருப்பையாவின் மரணத்தில் வீட்டில் உள்ளோருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து இதுகுறித்து கருப்பையாவின் குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மரணத்தில் சந்தேகம் எழுந்ததால் கருப்பையாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் கருப்பையாவின் உடலில் விஷம் இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து கருப்பையா மரணம் தொடர்பாக வீட்டில் உள்ளோரிடம் சிக்கல் காவல்நிலைய போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். அப்போது தனது தகாத உறவை கண்டித்ததால் தந்தையை சாப்பாட்டில் விஷம் வைத்து கொன்றதாக அவரது மகள் முருகேஸ்வரி போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து முருகேஸ்வரியை போலீசார் கைது செய்தனர். முருகேஸ்வரிக்கு தற்போது 26 வயது ஆகிறது. ஏற்கெனவே திருமணம் ஆகி முருகேஸ்வரிக்கு குழந்தையும் உள்ளது. கணவர் வெளி இடத்தில் வேலை செய்யும் நிலையில் வேறுஒரு நபருடன் முருகேஸ்வரிக்கு தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து முருகேஸ்வரியை பலமுறை கருப்பையா கண்டித்திருக்கிறார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் தந்தை என்றும் பாராமல் முருகேஸ்வரி கருப்பையாவை சாப்பாட்டில் விஷம் வைத்து கொன்றுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close