[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சோளத்தை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும்- பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18ம் தேதி காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS முன்னாள் அமைச்சர் கல்ராஜ் மிஷ்ரா ஹிமாச்சல பிரதேசத்தின் புதிய ஆளுநராக நியமனம் . ஹிமாச்சல் ஆளுநராக இருந்த ஆச்சார்யா தேவ்ரட் குஜராத் ஆளுநராக பணியிடமாற்றம்
  • BREAKING-NEWS ‘பெருங்களத்தூர் டூ சிங்கப்பெருமாள் கோவில்- 8 வழிச்சாலை’ : முதல்வர் அறிவிப்பு
  • BREAKING-NEWS தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது

தப்பிக்க நினைத்த மணல் கொள்ளையர்களால் நிகழ்ந்த விபத்து: காஞ்சி அருகே பரிதாபம்

sand-smugglers-make-accident-one-dead

உத்திரமேரூர் அருகே ஒழுகரை கிராமத்தில் மணல் கொள்ளையடித்து சென்ற வாகனம் மோதி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஒழுகரை கிராமம் அருகே செய்யாற்றங்கரை உள்ளது. இந்த செய்யாற்றங்கரையில் தொடர்ந்து மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று அதிகாலையில் மினி ஆட்டோ ஒன்று மணலை கொள்ளையடித்துக் கொண்டு ஒழுகரை கிராமம் அருகே வந்தது. இதைக் கண்ட கிராம மக்கள் வாகனத்தினை விரட்டி பிடிக்க முயன்றனர். இதானல் டிரைவர் வாகனத்தை ஊருக்குள் திருப்பினார். அங்கு முனுசாமி என்பவர் தனது வீட்டு வாசலில் அமர்ந்திருந்தார். அப்போது அதிவேகமாக வந்த வாகனம் முனுசாமி மீது கடுமையாக மோதியது.  இதில் முனுசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனிடையே வாகனத்தினை வயல்வெளியில் விட்டு விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் உத்திமேரூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாகனத்தினை கைப்பற்றினர்

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close