[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.66 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.63 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது

பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை : உறவினர் செய்த கொடூரம்

minor-girl-gangraped-by-3-for-11-hours-6-days-ago-greater-noida-police-yet-to-make-any-arrests

நொய்டாவில் 11ஆம் வகுப்பு மாணவி மூன்று பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

நொய்டாவைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவி கடந்த 18ஆம் தேதி தனது வீட்டிற்கு சென்றுக்கொண்டிருந்தார். அவர் வழக்கமாக செல்லும் பேருந்தை தவறவிட்டுவிட்டார். இதனால் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார். மதியம் 2.30 மணியளவில் அங்கு வந்த அந்தப்பெண்ணின் வகுப்பு தோழர் அவரை வீட்டில் இறக்கிவிடுவதாகக் கூறி தான் வந்த காரில் ஏற்றிச்சென்றுள்ளார். அப்போது காரில் மேலும் இருவர் இருந்துள்ளனர். கார் புறப்பட்ட சில நிமிடங்களில் அவர்கள் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சுமார் 11மணி நேரம் அந்த மாணவியை வன்கொடுமை செய்த அந்தக் கும்பல் நள்ளிரவு 1 மணியளவில் பூங்கா பகுதியில் மாணவியை வீசிவிட்டு சென்றுவிட்டனர். அப்போது அந்தப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுதொடர்பாக அந்த மாணவியின் பெற்றோருக்கு தகவல்  தெரிவித்துள்ளனர். 

இதுதொடர்பாக காவல்துறையினர் கூறுகையில், மாணவி வழக்கமாக செல்லும் பேருந்தை தவறவிட்டுள்ளார். அப்போது அங்கு வந்த அவரது உறவினர் பல்வால் மற்றும் வகுப்பு தோழன் இருவரும் காரில் வர அழைத்துள்ளனர். அவர்கள் இருவர்களும் நன்கு தெரிந்தவர்கள் என்பதால் மாணவியும் உடன் சென்றுள்ளார்.  அந்த மாணவியை காரில் வைத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். நொய்டாவின் பல பகுதிகளை காரில் சுற்றியுள்ளனர். மயங்கிய நிலையில் இருந்த மாணவி நள்ளிரவில் காரில் இருந்து  வீசப்பட்டுள்ளார். மயக்க நிலையில் இருந்ததால் வகுப்பு தோழன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தாரா என்பது அவருக்கு தெரியவில்லை என கூறினர்.

இதுதொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 376D  (கூட்டுப் பாலியல்
வன்கொடுமை), 363 (கடத்தல்) மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close