[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தி.மலையில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறன், மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்ய சிறப்புக்குழுக்களை அமைக்க பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு
  • BREAKING-NEWS வட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்
  • BREAKING-NEWS தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா

‘பாப்பா.. பிஸ்கட் வேணுமா? என்கூட வா’ - இரக்கமற்ற கொடூரன் கைது!

girl-went-to-buy-biscuits-raped-strangled-left-to-die-in-odisha-school

பிஸ்கட் வாங்க கடைக்குச் சென்ற 6 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தக் கொடூரன் கைது செய்யப்பட்டான்.

ஒடிசா மாநிலம், கட்டாக் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் வசித்து வரும் தம்பதியினரின் மகள் ஷீபா (6) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த சனிக்கிழமை மாலை நேரத்தில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை, தனது அம்மாவிடம் பிஸ்கட் கேட்டு அடம்பிடித்துள்ளது. அம்மா பிறகு வாங்கித் தருவதாக கூற, குழந்தை அழத்தொடங்கியுள்ளது. சற்று நேரம் அழுகை தொடர, ‘அருகில் உள்ள கடைக்கு சென்று வழக்கம்போல் வாங்கிக்கொண்டு வா’ என அம்மா கூறியுள்ளார்.

இதையடுத்து உடனே கடைக்கு புறப்பட்ட குழந்தை, மகிழ்ச்சியுடன் பிஸ்கட் வாங்க சென்றுள்ளது. அந்நேரம் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட குழந்தை வழி தெரியாமல் குழப்பமடைந்துள்ளது. யாரிடம் கேட்பது எனத் தெரியாமல் குழந்தை விழிக்கும் நேரத்தில், அந்தக் கொடூரன் வந்துள்ளான். அவரிடம் பிஸ்கட் வாங்க கடை எங்கிருக்கிறது என குழந்தை கேட்டுள்ளது. குழந்தை தனியாக வந்துள்ளதை புரிந்துகொண்ட கொடூரன், ‘பாப்பா பிஸ்கட் வேணுமா? என்கூட வா. நான் வாங்கித் தருகிறேன்’ என ஆசை வார்த்தை கூறி அழைத்துச்சென்றுள்ளான். 

ஆளில்லாத இடத்திற்கு குழந்தையை அழைத்துச்சென்று, இரக்கமின்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். குழந்தை அலறி அழ, யாரிடமும் சொல்லிவிடுமோ என்ற அச்சத்தில் குழந்தையின் கழுத்தை நெரித்துள்ளான். பின்னர் குழந்தையின் தலை மற்றும் முகத்தில் கடுமையாக தாக்கி கொலை செய்ய முயற்சித்துள்ளான். குழந்தை மயக்க நிலையை அடைய, அருகில் இருந்து பள்ளி வளாகத்தில் தூக்கி வீசிட்டு சென்றுள்ளான். கடைக்கு சென்ற குழந்தையை காணாமல் பதறிப்போன் அம்மா, தனது உறவினர்களுடன் கண்கள் கலங்கியபடி குழந்தையை தேடியுள்ளார். எங்கும் தேடியும் கிடைக்காத குழந்தை, இறுதியாக பள்ளி வளாகத்திற்குள் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆடைகள் இன்றி, ரத்த வெள்ளத்தில் கிடந்த குழந்தையை மீட்ட அம்மா மற்றும் உறவினர்கள் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். 

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் உயிர் பிழைப்பது கடினம் என்று கூறியுள்ளனர். இதுதொடர்பாக பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க, பெண் குழந்தை மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்களை பதிந்து குற்றவாளியை தேடிவந்தனர். சம்பவம் நடைபெற்ற இடம், நேரத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் அந்தக் கொடூரன் பிடிபட்டான். 25 வயதுள்ள அந்தக் கொடூரனைக் கைது செய்த காவல்துறை, அவனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. அந்தக் குழந்தைக்கு தற்போது 13 மருத்துவர்கள் சேர்ந்தக் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றது.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close