[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

மூதாட்டியைக் கொலை செய்து நகை கொள்ளை

killing-an-old-women-for-jewelry

கும்பகோணம் அருகே ஆடுதுறையில் மூதாட்டியைக் கொலை செய்து விட்டு 10 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணத்தை அடுத்த ஆடுதுறை சேணிய செட்டித் தெருவில் வசித்து வந்தவர் 70 வயது மூதாட்டி ஹதீஜா பீவி. இவரது கணவர் இறந்து விட்ட நிலையில், மகனும் வெளிநாட்டில் பணியில் இருக்கிறார். இதனால் ஹதீஜா பீவி தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நேற்றிரவு இருவர் ஹதீஜா வீட்டிற்குச் சென்றுள்ளனர்.அப்போது அவர் கதவைத் திறந்து போது பலமாக தாக்கி கொலை செய்து, அவர் அணிந்திருந்த தங்க செயின், மோதிரம்,உள்ளிட்ட 10 சவரன் நகைகளை கொள்ளை அடித்துள்ளனர். பின்னர் வீட்டில் ‌இருந்த பீரோக்களையும் உடைத்துள்ளனர், ஆனால் எதுவும் இல்லாததால் கொல்லைப்புறமாக தப்பியோடியுள்ளனர். இச்சம்பவம் குறித்து திருவிடைமருதூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த மற்றும் அருகருகே வீடுகள் உள்ள பகுதியில் நிகழ்ந்த ‌இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close