[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு

சந்தேகங்களை கிளப்பும் வடபழனி கொலை ? உண்மையான குற்றவாளி யார் ?

vadapalani-horror-crime

சென்னை வடபழனியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் பாலகணேஷ். இவரது மனைவி ஞானப்பிரியா. பாலகணேஷ் வடபழனியில் உள்ள சிவன் கோவிலில் அர்ச்சகராக பணிபுரிந்து வருகிறார். பால கணேஷ் காலையில் வெகு சீக்கிரமாக கோவில் செல்லும் வழக்கத்தை கொண்டுள்ளார். இந்தக் குடியிருப்பில் குளியல் அறை போன்றவைகள் வீட்டிற்கு வெளியில் தான் உள்ளது. இவர்கள் வசிக்கும் அதே தளத்தில் வீட்டின் உரிமையாளரும் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை காலையில் வீட்டின் உரிமையாளர் குளியலறைக்கு செல்லும் போது அங்கு பாலகணேஷ் கைகள் கட்டப்பட்டு மயக்க நிலையில் இருந்தார். இதனால் பதற்றமடைந்த அவர் இதுகுறித்து பாலகணேஷ் மனைவிக்கு தகவல் தெரிவிக்க அவரது இல்லத்திற்கு சென்றுள்ளார். ஆனால் அவரது வீடு வெளிப்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. தரையில் ரத்தக்கறைகள் படிந்திருந்தது. இதனையடுத்து கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது ஞானப்பிரியா வீட்டில் உள்ள அறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனையடுத்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் 108க்கு தகவல் தெரிவித்தனர். தலையில் பலத்த காயமடைந்திருந்த ஞானப்பிரியா சம்பவ இடத்திலே உயிரிழந்து விட்டார்.

பாலகணேஷை  சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஞானப்பிரியாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் கொலை நடந்த வீட்டிற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு ஆய்வுகளை மேற்கொண்டனர். சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட மோப்ப நாய் கொலை நடந்த வீட்டில் இருந்து வடபழனி 100 அடி சாலையில் வெகு தொலைவு ஓடி விட்டு நின்றது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். இதனடிப்படையில் விசாரித்து வருகின்றனர். ஞானப்பிரியா கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை காணவில்லை எனத் தெரிகிறது. 


எதற்காக இந்தக் கொலை சம்பவம் நடைப்பெற்றது என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். வெறும் திருட்டுக்காக கொலை நடந்ததா ? அல்லது ஏதேனும் முன் விரோதம் காரணமாக கொலைச் சம்பவம் நடைப்பெற்றதா? என்ற நோக்கில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். அக்கம்பக்கத்தில் விசாரித்ததில் பால்கணேஷ் பழகுவதற்கு இனிமையானவர் என்றும் அனைவரிடமும் சகஜமாக பழகக் கூடிய இயல்புடையவர் என கூறுகின்றனர். முன்விரோதம் என்றால் அவரது மனைவியை மட்டும் கொலை செய்தது ஏன்?. இவருக்கு அதிகமான படுகாயங்கள் இல்லை. கைகள் மட்டும் கால்கள் கட்டப்பட்டுள்ளது அவரது மனைவியின் கைகள்  கட்டப்பட்டுள்ளது ஆனால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

அவரது வீடு அமைந்திருப்பது அடுக்குமாடி குடியிருப்பு. அருகில் நிறைய வீடுகள் உள்ளது. கொள்ளையர்கள் இந்த ஒரு வீட்டை மட்டும் குறிவைத்து கொள்ளையடிக்க வந்தார்களா ? அப்படி என்றாலும் வீட்டிற்கு வெளியே தாக்கப்பட்ட பால கணேஷின் அலறல் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை. காலை 6 மணி வரையிலும் அவர் கைகள் கட்டப்பட்ட நிலையிலேயே மயங்கி கிடந்துள்ளார். இவையெல்லாம் காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாலகணேஷிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர், ‘‘நள்ளிரவு கதவு தட்டும் சத்தம் கேட்டு, நான் எழுந்து வந்து கதவை திறந்தேன். அப்போது வெளியில் இருந்த இருவர்  இரும்பு கம்பியால் என்னை தாக்கினர். உடனே அவர்கள் என் கைகளை கட்டினர். அப்போது என் மீது சாமி வந்ததது போன்று இருந்தது. அதன்பின்னர் என்ன நடந்தது என்று தெரியாது. காலையில் என்னை காவல்துறையினர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது நினைவு திரும்பியதும் எனது மனைவி கொலை செய்யப்பட்ட தகவல் எனக்கு தெரிய வந்தது’’ என்று தெரிவித்துள்ளார். 

பாலகணேஷ் முன்னுக்கு பின் முரணாக தகவல் அளித்து வருவதால் அவரிடம் மேலும் விசாரணை நடத்தினால் முழுவிபரமும் தெரியவரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close