[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

கழிவறையில் இளம்பெண் அடித்துக்கொலை... வடபழனியில் நடந்த கொடூர சம்பவம்..!

young-women-killed-in-chennai-vadapalani

சென்னை வடபழனியில் பெண்ணை கொலை செய்த‌ கொள்ளையர்கள் அவர் அணிந்திருந்த நகைகளை திருடிச்‌ சென்றுள்ளனர்.

சென்னை வடபழனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அர்ச்சகர் பிரபு என்பவர், மனைவியுடன் வசித்து வந்தார். இன்று அவரது வீட்டு கழிவறையில் பிரபுவின் மனைவி பிரியா தலையில் படுகாயங்களுடன், கைகள் கட்டப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். மற்றொரு அறையில் பிரபு கைகள் கட்டப்பட்ட நிலையில் காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிந்தார்.

இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் விஜயலட்சுமி கொடுத்த தகவலின்பேரில் வடபழனி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்ததில், பிரியா உயிரிழந்தது தெரிய வந்தது. அதனையடுத்து படுகாயத்துடன் இருந்த பிரபுவை காவல்துறையினர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். வீட்டிலுள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகேயுள்ள கண்காணிப்பு கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். பிரபு தம்பதிக்கு நன்கு அறிமுகமானவர்களே இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close