[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

நேர்மை தவறியதால் நிகழ்ந்த விபரீதம்: 5 வயது மகளோடு வங்கி மேலாளர் தற்கொலை

father-killed-her-daughter-and-suicide

திருச்சியில் 5 வயது மகளோடு வங்கி மேலாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி கோட்டை சங்கரன்பிள்ளை சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ராமசுப்பிரமணியன் (35) கோமதி  தம்பதியினர் வசித்து வந்தனர். ராமசுப்பிரமணியன் வங்கி ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர்களின் மகள் ஆருத்ராஸ்ரீ (5). அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தார். கோமதி வேலை நிமித்தமாக நேற்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்றிருந்தார். அந்த நேரம் ராமசுப்பிரமணியன் வங்கியில் இருந்து பள்ளிக்குச் சென்று மகள் ஆருத்ராஸ்ரீயை அழைத்து கொண்டு வீட்டுக்கு வந்துள்ளார்.

மாலை 4 மணி அளவில் கோமதி வீட்டுக்கு வந்து கதவை தட்டியுள்ளார். நீண்டநேரமாக கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர், அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு ராமசுப்பிரமணியனும்,சிறுமி ஆருத்ராஸ்ரீயும் தூக்கில் தொங்கிக் கொண்டு இருந்தனர். இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டை போலீசார் இந்த சம்பவம் பற்றி கோமதியிடம் விசாரிக்க, ராமசுப்பிரமணியன் வீட்டுக்கு சென்றனர். ஆனால் அங்கு கோமதி விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் ராமசுப்பிரமணியன் மற்றும் சிறுமி ஆருத்ராஸ்ரீ இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு வந்த கோமதியிடம் செய்தியாளர்கள் சம்பவம் குறித்து கேட்டபோது, " எனது கணவர் பணியாற்றிய அதே வங்கி கிளையில் மலையப்பன் என்பவர் துணை மேலாளராக பணியாற்றுகிறார். இவரது வற்புறுத்தலின்பேரில் பொன்சிவா ஏஜென்சி உரிமையாளர்களான கணவன் மனைவி சிவம் - பொன்மலர் ஆகிய இருவருக்கும் 4,5 லட்சங்களாக சுமார் 70 லட்சத்திற்கும் அதிகமாக முறைகேடாக வழங்கியுள்ளார். மலையப்பனின் தவறான வழிகாட்டுதலினால் தனது அதிகார வரம்பிற்கு அதிகமான பணத்தை பிக்சிட் டெபாசிட்டிலிருந்து  ராமசுப்பிரமணியன் வழங்கியுள்ளார். கிட்டத்தட்ட ஒருவருடமாகியும் அவர்கள் பணத்தை திரும்ப வழங்காததால் நாங்கள் குடும்பத்துடன் பொன்மலர் வீட்டிற்கு சென்று கேட்டபோது, அவர் மலையப்பனிற்கு போன் செய்து அவர்கள் இங்கு எல்லாம் வந்து கேட்கக் கூடாது என்று கூறியதோடு எங்களையும் அசிங்கப்படுத்தி அனுப்பிவிட்டார். அதன்பிறகு மலையப்பன் நாம் இந்த பணத்தை தவறாகதான் கொடுத்துள்ளோம். எனவே பொன்மலர் வாங்கிய பணத்தை லோன் வழங்கியது போல அவர்களது சப் ஏஜென்ஸி ஆவணங்களையும் சேர்த்து கணக்கு காட்டிவிடலாம் என்று சொல்லி அதுபோல செய்துள்ளனர்.

ஏற்கெனவே மலையப்பன் உள்ளிட்டோரின் அழுத்தத்தால் பணியில் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். இந்த நிலையில், இன்னும் சில நாட்களில் ஆய்வு பணி நடைபெற உள்ளது என்பதால் அதில் எங்கே தனது பெயர் கெட்டுவிடுமோ என்று பயந்து இவ்வாறு தற்கொலை செய்துள்ளார். என் கணவர் மற்றும் குழந்தை இருவரது இறப்பிற்கும் மலையப்பன், பொன்சிவா ஏஜென்சியை சேர்ந்த சிவா, பொன்மலர், அவர்களது மகன் அசோக் ஆகிய நால்வர் மட்டுமே காரணம். எனவே அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும். என் கணவர், குழந்தைகளின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும்". இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close