[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சுங்கச்சாவடி தாக்குதல், என்.எல்.சி முற்றுகை போராட்ட வழக்கில் வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத அனுமதிக்கப்படும்- மத்திய அமைச்சர் ஜவடேகர்
  • BREAKING-NEWS ஜூலை 12 இல் எஸ்.வி.சேகர் ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும்- நெல்லை நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஜம்மு- காஷ்மீரின் பந்திப்போரா பகுதியில் பாதுகாப்புப் படையினரால் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS பி.எட் 2 ஆண்டு பட்டப்படிப்புக்கு 21 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை விண்ணப்ப விநியோகம்
  • BREAKING-NEWS தருமபுரி: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 30,000 கன அடியில் இருந்து 26,000 கன அடியாக குறைந்தது
  • BREAKING-NEWS வேலூர்: ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீசிய சூறைக்காற்றில் சுமார் 5,000 வாழைகள் சாய்ந்தன

‘கொள்ளைக்கார ஊரு.. பாட்டி நகையை கழட்டுங்க’ திருட்டுப்பெண் கைவரிசை

chennai-thambaram-chain-snatching

சென்னை தாம்பரம் அருகே மூதாட்டியின் கவனத்தை திசைதிருப்பி நகையை பறித்துச் சென்ற பெண் சிக்கினார்.

சென்னை தாம்பரம் அடுத்த சமத்துவ பெரியார் நகர் பெருங்களத்தூர் அருகே வசிப்பவர் வயதான பாட்டி ராமாயி. இவர் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த செங்கல்பட்டை சேர்ந்த மஞ்சுளா என்பவர் பேச்சுக்கொடுத்துள்ளார். முதியோர் உதவித் தொகை வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார். பின்னர், “இது கொள்ளைக்கார ஊர் பாட்டி... திருட்டுப்பசங்க பைக்லயே சுத்துறாங்க. உங்க நகையெல்லாம் கழட்டி பத்திரமா வைச்சுக்கோங்க. இல்லையின்னா யாராச்சும் அறுத்துட்டு போயிடுவாங்க” எனக்கூறியுள்ளார். 

இதனால் அதிர்ந்து போன மூதாட்டி நகைகளைக் கழட்ட, அதை வாங்கி காகிதத்தில் மடித்துள்ளார் அந்தப் பெண். பின்னர் நகைகளை தானே வைத்துக் கொண்டு ஆட்டோ பிடித்து வருவதாக கூறி நகையை அபகரித்து செல்ல முயன்றுள்ளார். அப்போது அங்கு வந்த ரோந்துப் போலீசாரிடம் மூதாட்டி தகவலைக் கூறியுள்ளார். உடனே ரோந்து போலீசார் அவரை துரத்தி பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். தாம்பரம் போலீசார் பிடிபட்டவரிடம் விசாரணை செய்ததில் நகையைப் பறிக்க முயன்றதை ஒப்புக் கொண்டார் மஞ்சுளா. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், பின் சிறையில் அடைத்தனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close