[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சுங்கச்சாவடி தாக்குதல், என்.எல்.சி முற்றுகை போராட்ட வழக்கில் வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத அனுமதிக்கப்படும்- மத்திய அமைச்சர் ஜவடேகர்
  • BREAKING-NEWS ஜூலை 12 இல் எஸ்.வி.சேகர் ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும்- நெல்லை நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஜம்மு- காஷ்மீரின் பந்திப்போரா பகுதியில் பாதுகாப்புப் படையினரால் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS பி.எட் 2 ஆண்டு பட்டப்படிப்புக்கு 21 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை விண்ணப்ப விநியோகம்
  • BREAKING-NEWS தருமபுரி: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 30,000 கன அடியில் இருந்து 26,000 கன அடியாக குறைந்தது
  • BREAKING-NEWS வேலூர்: ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீசிய சூறைக்காற்றில் சுமார் 5,000 வாழைகள் சாய்ந்தன

ஹால் டிக்கெட்டை கிழித்த இளைஞர்கள்?: பள்ளி மாணவி தற்கொலை

school-student-suicide-in-krishnagiri

போச்சம்பள்ளி அருகே பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே மாணவியின் தற்கொலைக்கு சகமாணவர்கள்தான் காரணம் என மாணவியின் பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த தேவீரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர்.இவரது மகள் வித்யா. அகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். தற்பொழுது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில் மாணவி திடீரென வீட்டில்  இன்று காலை தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனிடையே மாணவியின் தற்கொலைக்கு சக மாணவர்கள் இரண்டு பேர்தான் காரணம் என மாணவியின் பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பொதுத்தேர்வை தான் படித்து வந்த அகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில்தான் மாணவி வித்யா எழுதி வந்திருக்கிறார். இதனிடையே மாணவிக்கு நேற்று சிறப்பு வகுப்பு நடைபெற்றிருக்கிறது. சிறப்பு வகுப்பு முடிந்து மாணவி வெளியே வந்தபோது, சக மாணவர்களான பசுபதி  மற்றும் சந்தன பாண்டியன் மாணவியின் ஹால்டிக்கெட் மற்றும் புத்தகங்களை வாங்கி கிழித்துள்ளனர். இதனால் மாணவி அவமானத்தில் மூழ்கியிருக்கிறார்.

பின்னர் தனது வீட்டிற்கு வந்து நடந்ததை பெற்றோரிடம் கூறி வேதனைப்பட்டிருக்கிறார். இந்நிலையில் மீண்டும் தேர்வு எழுத முடியாத சோகத்தினாலும், ஹால் டிக்கெட் கிழிக்கப்பட்ட அவமானத்தினாலும் வித்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவர்களது பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் பாரூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close