[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது

மாமா.. மாமா.. விட்டுவிடுங்கள்.. கெஞ்சிய ரித்தீஷ்... கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்

chennai-child-killed-accused-statment

சென்னையில் சிறுவனை கடத்தி கொலை செய்தது எப்படி என கைதான நபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை நெசப்பாக்கம் ஏழுமலை தெருவை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் கார்த்திகேயன்(38). இவரது மனைவி மஞ்சுளா(34). அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகின்றார். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது மகன் ரித்தீஷ் சாய்(10). நெசப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வருகின்றார்.

இதனிடையே கார்த்திகேயன் மனைவி மஞ்சுளாவிற்கும் சேலையூரை சேர்ந்த நாகராஜ் என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்துள்ளது. இதை அறிந்த மஞ்சுளாவின் கணவர் பலமுறை அவரை எச்சரிக்கை செய்துள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்திம் டியூசன் சென்ற சிறுவன் ரித்திஷ் வீடு திரும்பவில்லை. பின்னர் கார்த்திகேயன் டீயூசனில் சென்று விசாரித்த போது நாகராஜ் என்ற நபர் பிள்ளையை அழைத்து சென்றதாக தெரிவித்தனர்.

இதனை அறிந்த கார்த்திகேயன் உடனே நாகராஜை செல்போனில் தொடர்பு கொண்டபோது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் சிறுவன் கொலை தொடர்பாக நாகராஜை போலீசார் கைது செய்துள்ளனர். மஞ்சுளாவுக்கும் தனக்கும் இருந்த உறவிற்கு மகன் ரித்தீஷ் இடையூறாக இருந்ததாகவும், அதனால் சிறுவனை கொலை செய்ததாகவும் போலீசார் விசாரணையில் நாகராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் சிறுவனை கடத்தி கொலை செய்தது எப்படி என்றும் நாகராஜ் வாக்குமூலம் அளித்துள்ளார். “ மஞ்சுளாவுக்கும் எனக்கும் இருந்த தொடர்பை முதலில் அறிந்தவன் சிறுவன் ரித்தீஷ்தான். அதனால் எனக்கு அவன் மீது மிகுந்த வெறுப்பு இருந்தது. இந்த விஷயம் வெளியே தெரியவர, மஞ்சுளாவும் என்னிடம் இருந்து ஒதுங்கினார். இதனால் ரித்தீஷை கடத்தி மிரட்டினால் மஞ்சுளா வழிக்கு வந்துவிடுவார் என எண்ணினேன். அவரின் கோடிக்கணக்கான சொத்தும் எனக்கு கிடைக்கும் என நம்பினேன். எனவே டியூசன் சென்று அவனை அழைத்தேன். அவனும் வந்துவிட்டான். சந்தேகம் வராமல் இருக்க, அவன் விரும்பி சாப்பிடும் மட்டன் பிரியாணியை எம்ஜிஆர் நகர் ஓட்டல் ஒன்றில் வாங்கிக் கொடுத்தேன். அதன்பின் தாம்பரம் அருகே அடுக்குமாடி குடியிருப்புக்குச் சென்று, மஞ்சுளாவிடம் போன் செய்து மிரட்டினேன். அவர் குழந்தையை எதுவும் செய்துவிட வேண்டாம் என என்னிடம் கெஞ்சினார். அப்போது ரித்தீஷ் அம்மாவிடம் கொண்டுபோங்கள் மாமா என்றான். நானும் சரியென்று தான் சொன்னேன். அதனால் அவன் அமைதியாகத்தான் உட்கார்ந்து இருந்தான். பின்னர் காலியாக கிடந்த பீர் பாட்டிலை உடைத்து அவனது கழுத்தை அறுத்தேன். ஆனால் அறுபடவில்லை. மாமா.. மாமா.. என்னை விட்டுவிடுங்கள் வலிக்குது என்றான். பின்னர் அருகில் கிடந்த இரும்புக் கம்பியால் ஓங்கி அடித்தேன். அவன் இறந்துவிட்டான். பின்னர் என் மனமும் வேதனையடைந்தது. கழிவறைக்கு பயன்படுத்தும் அமிலத்தை குடித்தேன். ஆனால் வாந்தி வந்துவிட்டது. மேற்கொண்டு குடிக்க முடியவில்லை. பின்னர் எங்கள் வீட்டில் இருந்தபோது போலீசார் என்னை மடக்கி பிடித்துவிட்டனர்” என பரபரப்பு வாக்குமுலம் கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close