[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு தொடங்கியது; வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்காக முதல்வர் மீது பொய் பரப்புரை செய்தால் மக்கள் பாடம் புகட்டுவர்; அரசியல் காழ்ப்புணர்வால் கோடநாடு விவகாரத்தில் பொய் புகார் பரப்பப்படுகிறது - அமைச்சர் தங்கமணி
  • BREAKING-NEWS கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் ஆளுனரிடம் ஸ்டாலின் குற்றம்சாட்டியது அரசியல் ஆதாயத்துக்காகத்தான் - கே.பி.முனுசாமி
  • BREAKING-NEWS 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் என்ன?; என் வலிமை எனக்கு தெரியும் - கர்நாடக முதல்வர் குமாரசாமி
  • BREAKING-NEWS சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலாலுடன் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், அதிமுக எம்.பி.க்கள் ஜெயவர்தன், வைத்திலிங்கம் சந்திப்பு
  • BREAKING-NEWS கர்நாடக அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் அறிவிப்பு

இது சினிமா ஸ்டைல்: அழகால் ஆண்களை ஏமாற்றிய இளம் பெண் கைது!

cheating-girl-arrested-at-kovai

மேட்ரிமோனியல் மூலம் திருமணம் செய்வதாக கூறி ‌பல ஆண்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட இளம் பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையை சேர்ந்த பாலமுருகன் என்பவர் ஜெர்மனியில் பணிபுரிந்து வருகிறார். மேட்ரிமோனியல் மூலம் இவருக்கு சுருதி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்தனர்.  3 மாதங்கள் பழகியுள்ளனர். இந்நிலையில் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி ரூ.45 லட்சம் கேட்டுள்ளார் அந்தப் பெண். வருங்கால மனைவி என நம்பி கொடுத்தார் பாலமுருகன். பணம் பெற்ற சுருதி, அதற்கு பிறகு தொடர்பிலிருந்து விலகி விட்டார். தான் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பது லேட்டாகத் தெரிந்திருக்கிறது பாலமுருகனுக்கு.

இதையடுத்து கோவை சைபர் கிரைம் காவல்துறையினரிடம் பாலமுருகன் புகார் அளித்துள்ளார். வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், பி.என்.பாளையத்தை சேர்ந்த சுருதி, தாய் சித்ரா, தந்தை என கூறப்படும் பிரசன்ன வெங்கடேசன் ஆகிய மூவரை கைது செய்துள்ளனர். 

மேட்ரிமோனியல் மூலம் தகுதி, பொருளாதார சூழ்நிலை ஆகியவை அறிந்து அதற்கேற்ப தங்களின் பக்கத்தில் தகவல்களை மாற்றி ஆண்களை ஏமாற்றி பல கோடி மோசடி செய்ததும், குடும்பமாக, சுமார் 3 மாதங்கள் பழகிய பின் ஏதாவது புற்றுநோய், மூளைக்கட்டி ஆகிய பெரிய அளவிலான நோயை கூறி ஏமாற்றி பணம் பறித்ததும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு, நாமக்கல், நாகப்பட்டினம், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இந்த இளம்பெண் உட்பட இந்த கும்பலின் மீது இதே போல் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close