[X] Close
JUST IN
 • BREAKING-NEWS நான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல; மோடிக்கு எதிரானவன்: பிரகாஷ் ராஜ்
 • BREAKING-NEWS ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவுக்கு ஆதரவாக ரஜினி இருந்திருக்க வேண்டும் - சீமான்
 • BREAKING-NEWS வைரமுத்துவை காரணம் காட்டி தமிழகத்திற்குள் கொல்லைப்புறமாக வர நினைத்தால் வர முடியாது - பாரதிராஜா
 • BREAKING-NEWS ஹெச். ராஜாவும், தமிழிசையும் இணைந்து மெர்சல் படத்தை சூப்பர் ஹிட் ஆக்கிவிட்டனர்- நடிகர் விஷால்
 • BREAKING-NEWS நடிகர் கமல், ரஜினி, விஷால் ஆகிய மூவரும் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் - பிரகாஷ்ராஜ்
 • BREAKING-NEWS ஆண்டாள் சர்ச்சை தேவையற்றது- ஓ. பன்னீர் செல்வம்
 • BREAKING-NEWS ஒகி புயலால் காணாமல்போன மீனவர்களை தேடும்பணி நிறுத்தப்பட்டுள்ளது- அமைச்சர் நிர்மலா சீதாராமன்
 • BREAKING-NEWS வடலூர் வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசனத்தையொட்டி ஜன.31 இல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
 • BREAKING-NEWS நாகலாந்து, மேகாலாயா மாநிலங்களில் பிப்-27 ஆம் தேதியும், திரிபுரா மாநிலத்தில் பிப்-18 ஆம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும்- தேர்தல் ஆணையம்
 • BREAKING-NEWS ஜெ.சிகிச்சையின்போது உடன் இருந்த சசிகலாவுக்குத் தான் அனைத்து உண்மைகளும் தெரியும்- வைகோ
 • BREAKING-NEWS சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் தொடர்ந்து 24வது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்
 • BREAKING-NEWS டெல்லியில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்கிறார்
 • BREAKING-NEWS கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி 2வது நாளாக ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடர் உண்ணாவிரத போராட்டம்
 • BREAKING-NEWS 2016 டிசம்பர் 4ஆம் தேதி மாலை 5.15 மணிக்கே ஜெயலலிதா இறந்துவிட்டார் - திவாகரன்
குற்றம் 21 Dec, 2017 06:49 PM

மாணவனின் உயிரை பறித்த செல்போன் மோகம்

school-student-dead-in-vellore

செல்போன் தகராறு காரணமாக 8-ம் வகுப்பு பள்ளி மாணவன் சக மாணவர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே வேப்பங்கல் கிராமத்தை சேர்ந்தவர்கள் பார்த்திபன்-விஜி தம்பதியினர். இவர்களது மகன் சந்தோஷ், பொய்கை அரசு மேல்நிலை பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். சந்தோஷ் படிக்கும் பள்ளியில் சக மாணவர்களிடம் செல்போன் வாங்குவதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து செல்போன் வாங்க சந்தோஷ் சக மாணவர்களுடன் லத்தேரி அருகே லப்பை கிருஷ்ணாபுரத்திற்க்கு சென்றுள்ளார். அங்கு செல்போன் 500-ரூபாய் பேரம் பேசப்பட்டதில் மாணவர்களுடன் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னையில் சக மாணவர்கள் 3 பேர் சந்தோஷை கல்லால் தாக்கியுள்ளனர். இதில் சந்தோஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

பின்னர் பொது மக்கள் அளித்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த லத்தேரி காவல் துறையினர் லப்பைகிருஷ்ணாபுரம் கானாற்று பகுதியில் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக இருந்த சந்தோஷின் உடலை மீட்பு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து லத்தேரி காவல் துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சந்தோஷை கொலை செய்த 3 மாணவர்களில் ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர். மற்ற இரு மாணவர்களை தேடும் பணியில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். செல்போன் மீது கொண்ட மோகத்தால் சந்தோஷ் கொலை செய்யப்பட்ட சம்பவம் பொது மக்கள் மத்தியில் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close