[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆதார் அடையாள அட்டை செல்லும் - உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் செப்டம்பர் 28 முதல் 30ம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு

கொளத்தூர் கொள்ளை சம்பவம்: கொள்ளையர்கள் படம் வெளியீடு

chennai-jewellery-shop-theft-issue

சென்னை கொளத்தூரில் நகைக்கடையின் மேல்தளத்தில் துளையிட்டு மூன்றரை கிலோ தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் இரண்டு கொள்ளையர்களின் படத்தை காவல்துறை வெளியிட்டுள்ளது.

சென்னையை அடுத்துள்ள புழல் அருகே புதிய லட்சுமிபுரம் கடப்பா சாலையில், மகாலட்சுமி தங்க மாளிகை என்ற பெயரில் நகைக்கடை ஒன்று உள்ளது. கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த முகேஷ்குமார் என்பவர் இந்தக் கடையை நடத்தி வருகிறார். கடையின் மேல்தளத்தில் உள்ள ஒரு அறையை 10 நாட்களுக்கு முன் வடமாநிலத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள், துணிக் கடை நடத்துவதற்காக வாடகைக்கு எடுத்துள்ளனர். இந்நிலையில், மதிய உணவுக்காக முகேஷ்குமார் நேற்று பிற்பகல் வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பியபோது, கடையில் இருந்த நகைகள் கொள்ளை போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

கொள்ளை தொடர்பாக முகேஷ்குமார் ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அங்கு சென்ற காவல் கூடுதல் ஆணையர் ஜெயராமன் தலைமையிலான காவல்துறையினர் கடையை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். அப்போது கடையின் மேற்கூரையை துளையிட்டு அதன் வழியே நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனிடையே நகைக் கடையின் மேல்தளத்தில் இருந்த துணிக்கடையை பூட்டிவிட்டு வட மாநில இளைஞர்கள் காணாமல் போய்விட்டதால் அவர்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளது.நகைக் கடையில் சிசிடிவி கேமரா இல்லாத நிலையில், அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேமராவில், கொள்ளையர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் பைகளுடன் செல்லும் காட்சிகளை காவல்துறையினர் வெளியிட்டனர். இந்நிலையில் இரண்டு கொள்ளையர்களின் படத்தை காவல்துறை வெளியிட்டுள்ளது. இருவரும் வேறு மாநிலத்திற்கு தப்பிச்சென்றுவிட்டனரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதற்காக சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள கண்காணிப்பு காமிராக்களில் பதிவான காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கனவே கடை உரிமையாளர் பாண்டுரங்கனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கொள்ளையர்கள் இருவரும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு வணிக வளாகத்தில் இதே போல கடையை வாடகைக்கு எடுக்க முயற்சித்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close