[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்படும் - தலைமை நீதிபதி
  • BREAKING-NEWS போலி பயிற்சியாளர் ஆறுமுகம் பகீர் வாக்குமூலம்
  • BREAKING-NEWS ஒப்பந்ததாரரின் இடங்களில் 174 கோடி பணம், 105 கிலோ தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது
  • BREAKING-NEWS கோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்
  • BREAKING-NEWS 100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு

திருமணம் செய்யக்கோரி மாணவிக்கு கொலை மிரட்டல்: நடிகையின் மகன் கைது

actress-bhuvaneshwari-son-arrested

ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான மருத்துவ மாணவியை திருமணம் செய்து கொள்ளும்படி கொலை மிரட்டல் விடுத்ததாக நடிகை புவனேஸ்வரியின் மகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சென்னை வளசரவாக்கம், திருமலை நகர் ஏஞ்சல் தெருவில் வசிப்பவர் நடிகை புவனேஸ்வரி. இவரது மகன் மிதுன் சீனிவாசன் (23). சட்டக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு அண்ணா நகரை அடுத்த திருமங்கலத்தில் வசிக்கும் ஒரு மருத்துவ கல்லூரி மாணவியுடன் ஃபேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மிதுன், அந்த மாணவியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். ஆனால் மாணவி அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சீனிவாசன், மாணவியின் வீட்டிற்குச் சென்று வீட்டில் இருந்து பொருட்களை எல்லாம் அடித்து நொறுக்கியிருக்கிறார்.

மேலும் தன்னை திருமணம் செய்துகொள்ளாவிட்டால் உன்னை கொன்றுவிடுவேன் எனவும் மாணவியிடம் மிரட்டல் விடுத்திருக்கிறார். இதுதொடர்பாக காவல்நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். இதனையடுத்து மிதுனை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் மிதுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close