[X] Close
JUST IN
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகரின் கூட்டாளி புல்கித் என்பவர் கைது
 • BREAKING-NEWS கந்துவட்டி தொடர்பாக பொதுமக்கள் அச்சமின்றி புகார் அளிக்க முன்வர வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தேர்தல் தேதியை இறுதி செய்ய 2 நாளில் டெல்லி செல்கிறார் ராஜேஷ் லக்கானி
 • BREAKING-NEWS கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களின் பட்டியலை தயார் செய்ய விஷால் உத்தரவு
 • BREAKING-NEWS புதிய மணல் குவாரிகள் அமைப்பதை கைவிடாவிட்டால் மக்கள், விவசாயிகள் ஆதரவுடன் போராட்டம்: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS கந்துவட்டி கொடுமையால் அசோக்குமார் தற்கொலை விவகாரத்தில் காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது: இயக்குநர் அமீர்
 • BREAKING-NEWS சென்னை போயஸ் கார்டனில் பாதுகாப்பு பணிக்காக அதிகளவில் போலீசார் குவிப்பு
 • BREAKING-NEWS தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திமுக சார்பில் ரேஷன் கடைகள் முன் போராட்டம் தொடங்கியது
 • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழக அரசு அமைத்த ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தின் விசாரணை தொடங்கியது
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் என தகவல்
 • BREAKING-NEWS அனைவரும் ஒன்றாக, இணைந்தே இருக்கிறோம்: அமைச்சர் கடம்பூர் ராஜூ
 • BREAKING-NEWS இரு அணிகளின் மனம் இணைந்தே செயல்படுகிறது: பொன்னையன்
 • BREAKING-NEWS ரூ.18 ஆயிரம் கோடி கடனில் உள்ள தமிழக போக்குவரத்துத்துறையை மீட்டெடுக்க வேண்டும்: விஜயகாந்த்
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னத்தோடு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை சந்திப்போம்: தம்பிதுரை
குற்றம் 14 Nov, 2017 06:42 PM

சினிமா பாணியில் சுரங்கபாதை அமைத்து வங்கியில் கொள்ளை!

making-a-cinematic-style-in-the-bank-and-robbing-the-bank

மும்பையில் சினிமா போன்று சுரங்கபாதை தோண்டி தனியார் வங்கியில் கொள்ளை அடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மராட்டிய மாநிலம் நவிமும்பையில் உள்ள ஜீனிநகரில் பாங்க் ஆஃப் பரோடா வங்கியின் கிளை உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமைக்கு பிறகு வங்கிக்கு இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள் அருகில் இருக்கும் கடையில் இருந்து சுமார் 25 அடி நீளத்திற்கு சுரங்கபாதை போல் தோண்டி வங்கியின் பாதுகாப்பு அறைக்கு நுழைந்துள்ளனர்.பின்னர் அங்கிருந்த வாடிக்கையாளர்களின் 30 வங்கி லாக்கர்களை உடைத்து 40 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். விடுமுறை முடிந்து வங்கியியை திறந்த மேலாளர்கள் லாக்கர்கள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.   

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், சினிமா பாணியில் சுரங்கபாதை தோண்டி நூதனமான முறையில் கொள்ளை நிகழ்ந்திருப்பதை கண்டுபிடித்தனர். கொள்ளை நடந்த லாக்கர்களை ஆய்வு செய்த காவல் துறையினர் கொள்ளையர்களின் கைரேகை உட்பட பல தடயங்களை கண்டுபிடித்துள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டவர்களை பிடிப்பதற்காக காவல் துறை தரப்பில் தனி குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் பரோட்டா கடையில் இருந்து சுரங்கபாதை அமைத்து தனியார் வங்கி ஏடிஎம்மில் கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close