[X] Close
JUST IN
 • BREAKING-NEWS பெங்களூரு சிறையிலுள்ள சசிகலா, இளவரசியிடம் தேவைப்பட்டால் விசாரணை நடத்தப்படும்- வருமானவரித்துறை
 • BREAKING-NEWS ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நமது எம்ஜிஆர், முரசொலி ஆகிவிட்டது- ஜெயக்குமார்
 • BREAKING-NEWS டிச. 31 க்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்
 • BREAKING-NEWS 44,999 போலி வாக்காளர்கள் இருப்பதாக திமுக கூறிய நிலையில் 45,819 போலி வாக்காளர்கள் நீக்கம்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதியில் 45,000 போலி வாக்காளர்கள் நீக்கம்- தேர்தல் ஆணையம்
 • BREAKING-NEWS மைனாரிட்டி ஆட்சி இருப்பதை சட்டப்படி பார்த்து சட்டமன்றத்தை கூட்ட ஆளுநர் உத்தரவிட வேண்டும்- மு.க. ஸ்டாலின்
 • BREAKING-NEWS திருவாரூர்: கருப்பூரில் பாமாயில் நிறுவனத்தின் எண்ணெய் கழிவுகள் பாசன வாய்க்காலில் கலந்தன
 • BREAKING-NEWS சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த தல்வீர் பண்டாரி 2வது முறையாக தேர்வு
 • BREAKING-NEWS ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிகள் இணைந்து மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?- மைத்ரேயன்
 • BREAKING-NEWS புதுச்சேரியில் 4வது நாளாக அரசுப்பேருந்துகளை இயக்காமல் ஊழியர்கள் போராட்டம்
 • BREAKING-NEWS முதலமைச்சரின் ஆணைப்படி வைகை அணையில் இருந்து வினாடிக்கு 900 கனஅடி நீர் திறப்பு
 • BREAKING-NEWS அரசு இருக்கும்போது ஆளுநர் ஆய்வு செய்வது சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் புறம்பானது - முத்தரசன்
 • BREAKING-NEWS இன்றைய அரசியல் சூழலில் சட்டப்பேரவையை கூட்ட முதல்வர் தயாரா?: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS கோவையில் ஆய்வு மேற்கொண்டது போன்ற பணிகள் தொடரும்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
குற்றம் 27 Oct, 2017 12:09 PM

காதலித்த இளம்பெண் அப்பா, அம்மா வேடிக்கை பார்க்க, ஆணவக் கொலை!

cop-wife-watch-as-daughter-is-murdered-for-family-honour

சொன்னதைக் கேட்காமல் காதலித்ததாக, அப்பா, அம்மா வேடிக்கை பார்க்க, இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம், ஜஜ்ஜார் மாவட்டத்தில் உள்ளது சுர்ஹெடி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் வேத்பால் (48). ராணுவத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்ற இவர், இப்போது டெல்லி போலீசில் பணியாற்றி வருகிறார். இவர் மனைவி மோனி தேவி. இவர்கள் மகள் வந்தனா (20). இவர், அருகிலுள்ள தாக்லா கிராமத்தைச் சேர்ந்த ராகுல் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். காதல் விவகாரம் வந்தனாவின் வீட்டுக்குத் தெரிய வந்ததும், காதலை கைவிடுமாறு கூறினர். மறுத்துவிட்டார் வந்தனா. இதையடுத்து இவரின் மாமா, ஜஸ்வந்த் (40) என்பவரும் காதலை கைவிட அறிவுறுத்தினார். 
கேட்காததால், குடும்பம் ஒன்று கூடி வந்தனாவை ஆணவக்கொலை செய்ய முடிவு செய்தது. அதன்படி, அப்பா, அம்மா வேடிக்கை பார்க்க, அவர்கள் கண்முன் வந்தனாவின் கழுத்தை நெறித்துக் கொன்றார் மாமா.

இதை தற்கொலை என்று சொல்லி தப்பிக்கப் பார்த்தது குடும்பம். ஆனால் உள்ளூர்க்காரர்கள் இதில் சந்தேகம் இருப்பதாகக் கூறியதை அடுத்து, போலீசார் விசாரித்தனர். விசாரணையில் இந்த ஆணவக்கொலை விவகாரம் வெளியே தெரிய வந்துள்ளது. இதையடுத்து வேத்பாலும் அவர் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவான ஜஸ்வந்தை தேடி வருகின்றனர்.

குடும்பமே சேர்ந்து இளம் பெண்ணைக் கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close