[X] Close
JUST IN
 • BREAKING-NEWS பெங்களூரு சிறையிலுள்ள சசிகலா, இளவரசியிடம் தேவைப்பட்டால் விசாரணை நடத்தப்படும்- வருமானவரித்துறை
 • BREAKING-NEWS ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நமது எம்ஜிஆர், முரசொலி ஆகிவிட்டது- ஜெயக்குமார்
 • BREAKING-NEWS டிச. 31 க்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்
 • BREAKING-NEWS 44,999 போலி வாக்காளர்கள் இருப்பதாக திமுக கூறிய நிலையில் 45,819 போலி வாக்காளர்கள் நீக்கம்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதியில் 45,000 போலி வாக்காளர்கள் நீக்கம்- தேர்தல் ஆணையம்
 • BREAKING-NEWS மைனாரிட்டி ஆட்சி இருப்பதை சட்டப்படி பார்த்து சட்டமன்றத்தை கூட்ட ஆளுநர் உத்தரவிட வேண்டும்- மு.க. ஸ்டாலின்
 • BREAKING-NEWS திருவாரூர்: கருப்பூரில் பாமாயில் நிறுவனத்தின் எண்ணெய் கழிவுகள் பாசன வாய்க்காலில் கலந்தன
 • BREAKING-NEWS சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த தல்வீர் பண்டாரி 2வது முறையாக தேர்வு
 • BREAKING-NEWS ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிகள் இணைந்து மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?- மைத்ரேயன்
 • BREAKING-NEWS புதுச்சேரியில் 4வது நாளாக அரசுப்பேருந்துகளை இயக்காமல் ஊழியர்கள் போராட்டம்
 • BREAKING-NEWS முதலமைச்சரின் ஆணைப்படி வைகை அணையில் இருந்து வினாடிக்கு 900 கனஅடி நீர் திறப்பு
 • BREAKING-NEWS அரசு இருக்கும்போது ஆளுநர் ஆய்வு செய்வது சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் புறம்பானது - முத்தரசன்
 • BREAKING-NEWS இன்றைய அரசியல் சூழலில் சட்டப்பேரவையை கூட்ட முதல்வர் தயாரா?: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS கோவையில் ஆய்வு மேற்கொண்டது போன்ற பணிகள் தொடரும்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
குற்றம் 26 Oct, 2017 12:42 PM

மனைவியை சுட்டுவிட்டு யாரோ கொன்றதாக நாடகம்: கணவனை வளைத்தது போலீஸ்

attack-faked-rohini-woman-killed-by-husband-police

மனைவியை சுட்டுக்கொன்றுவிட்டு கடன்காரர்கள் கொன்றதாக, நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுடெல்லியில் உள்ள ரோஹினி பகுதியை சேர்ந்தவர் பங்கஜ் மெஹ்ரா. தொழில் அதிபர். இவர் மனைவி பிரியா மெஹ்ரா. இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் இருக்கிறான். தனது காரில் குடும்பத்துடன் வெளியே சென்றிருந்த பங்கஜ் மெஹ்ரா நேற்று அதிகாலை வீடு திரும்பினார். இவர்கள் காரிலிருந்து இறங்கிய போது, மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் பிரியா, ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அவரை, கணவர் பங்கஜ் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பிரியா பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது, ஒரு காரில் இருந்து இறங்கிய நான்கைந்து பேர் திடீரென்று தன் மனைவியை சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டதாக பங்கஜ் மெஹ்ரா தெரிவித்தார். ஆனால் அங்கு இன்னொரு கார் வந்ததற்கான எந்த தடயம் இல்லை. போலீசார் தொடர்ந்து விசாரித்ததில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். பின்னர் நேற்று இரவு முழுவதும் போலீசார் விசாரித்தனர். அப்போது பங்கஜ் மெஹ்ரா, தன் மனைவியை தானே சுட்டுக்கொன்றதாக ஒப்புக்கொண்டார். 
கருத்துவேறுபாடு காரணமாக பிரியாவை பிரிந்திருந்த  மெஹ்ரா இன்னொரு பெண்ணை திருமணம் செய்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். ஆனால், அந்த பெண் பற்றிய விவரங்களை அவர்கள் வெளியிடவில்லை. 

மனைவியை சுட்டுக்கொன்று விட்டு போலீசை திசைத் திருப்ப, கடன்காரர்கள் கொன்றதாக கணவனே நாடகமாடிய சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close