டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒருபகுதியாக போலி மருத்துவர்களை கண்டுபிடித்து களையும் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் திருவள்ளுர் மாவட்டத்தில் ஒரு மாதத்திற்குள் 11 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதவிர சென்னையை அடுத்த மணலியில் கடந்த செப்டம்பர் மாதம் 3-ஆம் தேதி தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாக புகார் எழுந்தது, இதையடுத்து மருத்துவக்குழுவினர் நடத்திய விசாரணையில் மணலியில் மருத்துவம் படிக்காமல் மருத்துவமனை நடத்தி வந்த தம்பதி பிடிபட்டுள்ளனர். உயர்மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என விளம்பரப்படுத்தி மருத்துவர்களை கொண்டு மருத்துவமனை நடத்தி வந்த சுந்தரமூர்த்தியும் அவரது மனைவி ருக்மணியும், மருத்துவர்கள் வராத நேரத்தில் தாங்களாகவே சிகிச்சை அளித்தது தெரியவந்தது.
இதனிடையே, டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் போலி மருத்துவர்களின் கைது நடவடிக்கைகள் தொடரும் என்று கூறியுள்ள மாவட்ட நிர்வாகம், இதுபற்றி 1077 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
உலகின் சக்திவாய்ந்த பெண்கள்: நிர்மலா சீதாராமனுக்கு இடம்..!
ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி
ஜில்.. கிரேட்டா! ஜில்!! - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட்!
பப்ஜி ஆர்வத்தில் தண்ணீருக்கு பதிலாக கெமிக்கலைக் குடித்த இளைஞர் உயிரிழப்பு!
3 குழந்தைகளை கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை: லாட்டரி சீட்டே காரணம் என மரண வாக்குமூலம்..!