[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அனைத்து அரசு துறைகளும் இணைந்து செயல்பட்டால் டெங்கு கொசு, காய்ச்சலை கட்டுப்படுத்தலாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து
  • BREAKING-NEWS ஈரோடு அருகே கோயிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதில் 6 பேர் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

தீபாவளி கொண்டாட்ட 'குடி'யில் கொலை: கடிகார வியாபாரி கைது

pollachi-bus-driver-death

பொள்ளாச்சியில் தீபாவளி கொண்டாட்டத்தில் குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் ஆம்னி பேருந்து ஓட்டுநரை படுகொலை செய்த கடிகார வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார். 

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் உள்ள மகாலிங்கபுரம் சரோஜினி வீதியை சேர்ந்தவர் தனியார் ஆம்னி பேருந்து ஓட்டுநர் ஆறுமுகம். இவருக்கும், இந்திரா நகரைச் சேர்ந்த கடிகார வியாபாரி குரு என்பவருக்கும் கொடுக்கல், வாங்கலில் பிரச்னை இருந்ததாக கூறப்படுகிறது. 

இருந்தாலும் தீபாவளி தினமான நேற்று அவர்கள் இருவரும் தங்கள் தகராறை மறந்து ஒன்றாக மது அருந்தச் சென்றுள்ளனர். மது அருந்திக் கொண்டிருந்த போது திடீரென் இருவருக்கும் இடையே பேச்சுவாக்கில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கடிகார வியாபாரி குரு, ஆம்னி பேருந்து ஓட்டுநர் ஆறுமுகத்தை கத்தியால் குத்தி கொலை செய்தார். இதையடுத்து தகவலறிந்து வந்த போலீஸார் அவரை கைது செய்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close