[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நடிகை ஸ்ரீ தேவி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல்
  • BREAKING-NEWS தமிழில் விஜய் நடிப்பில் ஸ்ரீதேவி நடித்து வெளியான புலி திரைப்படமே அவரின் கடைசி படமாகும்
  • BREAKING-NEWS ஸ்ரீதேவியின் மறைவுக்கு தமிழ் மற்றும் இந்தி நடிகைகள் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர்
  • BREAKING-NEWS நடிகை ஸ்ரீதேவி திடீர் மாரடைப்பு காரணமாக துபாயில் காலமானார். 
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங்
  • BREAKING-NEWS நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது எனும் விவாதம் தேவையில்லாதது, மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் - நடிகர் சிம்பு
  • BREAKING-NEWS சென்னை வரும் பிரதமர் மோடியை வரவேற்க முதல்வர், துணை முதல்வர் சென்னை விமான நிலையம் வருகை

சென்னையில் மெக்கானிக் இளைஞர் படுகொலை

youth-murdered-in-chennai

சென்னையில் கொருக்குப்பேட்டை பகுதியில் 28 வயதான மெக்கானிக் இளைஞர் கொலை செய்யப்பட்டார். அவரது சடலத்தை அடையாளம் தெரியாத நபர்கள் சாலையில் வீசிச் சென்றதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

‌தகவல்‌ அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகொலை செய்யப்பட்ட மெக்கானிக்கின் பெயர் அந்தோணி என்பதும், மனைவி மற்றும் இரு குழந்தைகளை பிரிந்து வாழ்ந்து வந்தார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. முன்விரோதம் காரணமாக அவர் படுகொலை செய்யப்பட்டரா? அல்லது வேறு காரணமாக என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close