[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காங்கிரஸ்-திமுக இடையே எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை - குஷ்பு
  • BREAKING-NEWS மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வான சீத்தாராம் யெச்சூரிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
  • BREAKING-NEWS ஐபிஎல் கிரிக்கெட்: ஹைதராபாத் அணிக்கு 183 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி
  • BREAKING-NEWS ஐபிஎல் கிரிக்கெட்: ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி பேட்டிங்
  • BREAKING-NEWS காரைக்குடி மீனாட்சிபுரத்தில் பழைய மரப்பொருட்கள் விற்பனை கடையில் தீ விபத்து
  • BREAKING-NEWS சிறுமிகளை வன்கொடுமை செய்தால் தூக்கு- குடியரசுத்தலைவர் ஒப்புதல்
  • BREAKING-NEWS கிருஷ்ணகிரி சாந்தி நகரில் வீட்டில் ஏசி வெடித்து அரசு பள்ளி தலைமை ஆசிரியை அஞ்சலாமேரி உயிரிழப்பு

‌மதுபான கடையை இடம்மாற்ற லஞ்சம் பெற்ற ஆணையர் கைது

man-arrested-for-getting-bribe

காஞ்சிபுரத்தில் அரசு மதுபான கடையை இடமாற்றம் செய்ய 5,000 ரூபாய் கையூட்டு பெற்ற ஆயத் தீர்வை உதவி ஆணையரை, லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆயத்தீர்வை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் உதவி ஆணையராக இருப்பவர் சீனுவாசன். காஞ்சிபுரம் மார்கெட் அருகே உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றக்கோரி அப்பகுதி மக்கள் போராடி வந்தனர். இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அந்தக் கடையை இடமாற்ற செய்ய உத்தரவிட்டார்.

இதனையடுத்து அக்கடையின் மேலாளர் நிர்மல்குமார் கடையை இடமாற்றம் செய்ய, உதவி ஆணையர் சீனுவாசனை அணுகியுள்ளார். அதற்கு சீனுவாசன் கடையை இடமாற்றம் செய்ய ரூ.15,000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு ரூ.5,000 லஞ்சம் தருவதாக நிர்மல்குமார் ஒப்புக் கொண்டுள்ளார். இது குறித்து நிர்மல்குமார் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் ரசாயனம் தடவிய ரூ.5,000 ரூபாய் நோட்டுக்களை நிர்மல்குமாரிடம் கொடுத்து அதனை சீனுவாசனிடம் கொடுக்குமாறு கூறினார். இந்த ரூபாய் நோட்டுகளைக் கொண்டு சென்று நிர்மல்குமார், உதவி ஆணையர் சீனுவாசனிடம் கொடுக்கும்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் உதவி ஆணையர் சீனுவாசனை கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பாகத் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close