[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நடிகை ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக மும்பை புறப்பட்டார் ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக இன்று இரவு மும்பை செல்கிறார் நடிகர் ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS எந்த மொழியில் நடித்தாலும் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி - நடிகர் அரவிந்த் சாமி
  • BREAKING-NEWS தனது நடிப்புத் திறமையை பலவிதங்களில் வெளிப்படுத்தியவர் ஸ்ரீதேவி - இளையராஜா
  • BREAKING-NEWS ஜெயலலிதா சிலை அமைக்கப்பட்டது குறித்து விமர்சனங்கள் வருகிறது, குறை இருந்தால் சிற்பியே நிவர்த்தி செய்வார் - அமைச்சர் கடம்பூர் ராஜு
  • BREAKING-NEWS இந்தியாவில் மிகவும் திறமையான நடிகையாக விளங்கிய ஸ்ரீதேவியின் மறைவுக்கு இரங்கல் - இளையராஜா
  • BREAKING-NEWS கட்சி அலுவலகத்திலுள்ள ஜெயலலிதா சிலையின் முகம் சீரமைக்கப்படும் என முதல்வர் உறுதி - மாஃபா பாண்டியராஜன்

ஆசிரியைக்கு அரிவாள் வெட்டு: முன்னாள் மாணவர் வெறிச்செயல்

kancheepuram-student-attack-teacher

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் முன்னாள் மாணவர் ஒருவர் வகுப்பறையில் புகுந்து ஆசிரியையை அரிவாளால் வெட்டியுள்ளார். படுகாயமடைந்த ஆசிரியைக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிங்கப்பெருமாள் கோவில் பகுதியைச் சேர்ந்த யோகேஷ் என்பவர், சோகண்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். யோகேஷ் மீது பல்வேறு புகார்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை பூங்கொடியின் பரிந்துரையின்பேரில், யோகேஷ் இந்த ஆண்டு பள்ளியில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிகிறது.

சில மாதங்கள் கழித்து நேற்று பள்ளிக்குச் சென்ற யோகேஷ், வகுப்பறைக்குள் புகுந்து ஆசிரியை பூங்கொடியை அரிவாளால் வெட்டினார். தலையில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட பூங்கொடிக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் யோகேஷை ஆசிரியர்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close