[X] Close
JUST IN
 • BREAKING-NEWS மேட்டூர் அணையின் 16 கண் உபரி நீர் போக்கியில் தேங்கிய தண்ணீரில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி
 • BREAKING-NEWS 8 மணிக்கு தொடங்குகிறது குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை
 • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் வார்டு வாரியாக மகளிர் குழு மூலம் பணப்பட்டுவாடா நடக்கிறது: தமிழிசை
 • BREAKING-NEWS இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது
 • BREAKING-NEWS கோடி கோடியாக கொட்டிக்கொடுத்தாலும் ஆர்.கே.நகரில் அதிமுக டெபாசிட் பெறாது: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS இலங்கை அணி எதிரான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 216 ரன்கள் வெற்றி இலக்கு
 • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் சர்வ சாதாரணமாக பணப்பட்டுவாடா நடக்கிறது: பொன்.ராதாகிருஷ்ணன்
 • BREAKING-NEWS பணப்பட்டுவாடா புகாரை தொடர்ந்து ஆர்.கே. நகரில் தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா ஆய்வு
 • BREAKING-NEWS ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ரூ.100 கோடி வரை பணப்பட்டுவாடா நடந்ததாக ஸ்டாலின் புகார்
 • BREAKING-NEWS ஆர்.கே. நகரில் டிடிவி தினகரன் ஆதரவாளரிடமிருந்து ரூ. 20 லட்சம் பறிமுதல்
 • BREAKING-NEWS ஒகி புயல் பாதிப்பு குறித்த அறிக்கையை இன்று மத்திய அரசுக்கு அனுப்புகிறது தமிழக அரசு
 • BREAKING-NEWS கொளத்தூர் செல்லப்பிள்ளை என்றாலும் ஆர்.கே. நகரை வளர்ப்புப் பிள்ளையாக கருதி வளர்ச்சிபெற வைப்பேன் - மு.க. ஸ்டாலின்
 • BREAKING-NEWS பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் சென்னை ஆய்வாளர் முனிசேகர் மீது ராஜஸ்தான் மாநிலம் போலீசார் வழக்குப்பதிவு
 • BREAKING-NEWS ஆளுநரின் ஆய்வுக்கூட்டங்களில் பங்கேற்க வேண்டாம் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்த வேண்டும்- ப. சிதம்பரம்
குற்றம் 05 Oct, 2017 06:19 PM

பெண்வேடத்தில் வந்து பெண் மருத்துவரை வெட்டியவர் கைது!

chennai-lady-doctor-attacked

சென்னை பெரம்பூரில் பெண் வேடத்தில் வந்து, பெண் மருத்துவரை சரமாரியாக வெட்டிய நபர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சென்னை கோயம்பேட்டில் ‌கருத்தரிப்பு மையம் நடத்திவருபவர் மருத்துவர் ரம்யா. இவர் வழக்கம்போல பணி முடிந்து பெரம்பூர் படேல் சாலையில் உள்ள தனது அடுக்குமாடிக் குடியிருப்புக்குத் திரும்பினார். காரைவிட்டு இறங்கி வீட்டுக்குச் செல்ல முயன்ற ரம்யாவை, அங்கு மறைந்திருந்த பர்தா அணிந்த நபர் திடீரென பாய்ந்து அரிவாளால் வெட்டினார். ரம்யாவின் அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தபோது, பர்தா அணிந்த‌ நபர் பைக்கில் தப்பி ஓடினார். பலத்த காயமடைந்த ரம்யா, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 

ரம்யாவின் கணவரும் மருத்துவராக இருக்கும் நிலையில், இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளைக்கொண்டு செம்பியம் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். இதுதொடர்பாக தா‌மஸ் ‌என்ற மருத்துவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவர் தாமஸிடம் ரம்யா ஏற்கனவே வேலை பார்த்து வந்தார். தற்போது ரம்யா கோயம்பேட்டில் தனியாக மருத்துவமனையை தொடங்கி நடத்திவருகிறார். இதன் காரணமாக எழுந்த தொழிற்போட்டியால் மருத்துவர் தாமஸ் ஆட்களை ஏவி கொலை முயற்சியில் ஈடுபட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவர் ரம்யா சிறந்த கருவுறு மையத்திற்கான விருது மற்றும் சிறந்த மருத்துவருக்கான விருதுகளை பெற்றவர் ஆவார்.
 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close