[X] Close
JUST IN
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்

பிறந்து 7 நாட்களே ஆன குழந்தையை விற்க முயற்சி - செவிலியர் உட்பட 4 பேர் கைது

four-arrested-for-trying-to-sell-7-days-child

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை விற்க முயன்ற கிராம செவிலியர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். 

சேரங்கோடு அரசு தேயிலை தோட்ட குடியிருப்பில் வசித்து வரும் சுரேஷ்குமார் என்பவரது மனைவி மகேஸ்வரிக்கு கடந்த 6 நாட்களுக்கு முன் கொளப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆண்குழந்தை பிறந்தது. ஏற்கனவே 2 குழந்தைகள் இருந்ததால், மூன்றாவது பிறந்த குழந்தையை தத்து கொடுக்க தம்பதி முடிவெடுத்துள்ளனர். அதற்கு உதவுவதாக கூறிய கிராம செவிலியர் எலிசபெத், பெற்றோருக்கு தெரியாமல் குழந்தையை விற்க திட்டமிட்டுள்ளார். 

அதற்காக, குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்த ரேஷ்மாபானு, கதிரேசன், ரவிச்சந்திரன் ஆகியோரிடம் பேசியுள்ளார்‌. அது குறித்து, காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, குழந்தை கடத்தல் கும்பலை தொடர்பு கொண்ட காவல்துறையினர் குழந்தை விலைக்கு வாங்குபவர்களைப் போல நடித்து, குழந்தை விலைக்கு வேண்டும் என கேட்டுள்ளனர். அப்போது பேசுவது காவல்துறையினர் என்று தெரியாமல் அவர்களிடம் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் 5 லட்சம் வரை குழந்தைக்கு பேரம் பேசியுள்ளனர். 

குழந்தையை விற்பதற்காக கூடலூரிலிருந்து ரேஷ்மாபானு சேரங்கோடுக்கு அவர்களை அழைத்து வந்துள்ளார். அப்போது, குழந்தையை வாங்க வந்தவர்கள் போல் மாறுவேடத்தில் சென்ற போலிசார் எலிசபெத், பானு, கதிரேசன், ரவிச்சந்திரன் ஆகியோரை கையும்களவுமாக பிடித்து கைது செய்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close