[X] Close
JUST IN
 • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக ராகுல் காந்தி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
 • BREAKING-NEWS குஜராத் தேர்தலில் எல்லைமீறி பாஜக பரப்புரை செய்து வருகிறது என முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட்
 • BREAKING-NEWS மீனவர்கள் மீட்காததை கண்டித்து சென்னை ஆட்சியர் அலுவலகம் முன் நாளை போராட்டம்- ஸ்டாலின்
 • BREAKING-NEWS தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
 • BREAKING-NEWS வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு
 • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,815 கனஅடியில் இருந்து 2,375 கன அடியாக குறைந்தது
 • BREAKING-NEWS காணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி நாகையில் கடலில் இறங்கி பெண்கள் போராட்டம்
 • BREAKING-NEWS இலங்கைக்கு படகில் கடத்தப்படவிருந்த ரூ.75 லட்சம் கஞ்சா ராமேஸ்வரம் அருகே பறிமுதல்
 • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர்: பாரமுல்லா பகுதியில் பாதுகாப்பு படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
 • BREAKING-NEWS உலக ஹாக்கி லீக் தொடரில் வெண்கலம் வென்றது இந்திய அணி
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அலுவலராக பிரவீன்நாயர் பொறுப்பேற்றுக்கொண்டார்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பாக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், ஆலோசனை
 • BREAKING-NEWS நாகையில் 2ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவ மக்களுடன் அமைச்சர் ஓ.எஸ் மணியன் பேச்சு
 • BREAKING-NEWS தமிழும் தமிழ் நாடும் என் மனதுக்கு நெருக்கமான ஒன்று - வெங்கய்ய நாயுடு
குற்றம் 24 Sep, 2017 06:46 PM

பகலில் சமையல்; இரவில் கொள்ளை- சென்னையைக் கலக்கியவர் கைது

robbery-man-arrested-in-chennai

சென்னையில் வீடுகளில் புகுந்து கொள்ளையடித்து வந்த இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.

சென்னையில் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளான வடபழனி, தியாகராயர் நகர், விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் நிகழ்வதாக புகார்கள் எழுந்தன. இதன் காரணமாக ரோந்து பணியை தீவிரப்படுத்திய காவல்துறையினர் வடபழனி 100 அடி சாலையில் கடப்பாரையுடன் சுற்றி திரிந்த இளைஞரை பிடித்து விசாரணை நடத்தியதில் அதிர வைக்கும் தகவல்கள் வெளி வந்தன.

அந்த இளைஞனின் பெயர் வஜ்ரூதீன் என்ற சிவா என்பதும் அவர் கையில் வைத்திருந்த கடப்பாரை வீட்டின் பூட்டை உடைக்க பயன்படுத்தியது என்பதும் தெரியவந்தது. பகல் நேரங்களில் திருமண நிகழ்ச்சிகளில் சமையல் பணியில் ஈடுபட்டு வந்த சிவா, தான் திட்டம்தீட்டி வைத்திருக்கும் இடத்திற்கு இரவில் சென்று நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்து வந்துள்ளார். கொள்ளையடிக்கும் நகைகளை பாரிமுனையில் உள்ள ஒரு நகைப்பட்டறையில் கொடுத்து தங்க காசாக மாற்றி அதனை பணமாக்கி ஜாலியாக வலம் வந்துள்ளார் சிவா. அவ்வாறு சிவா வைத்திருந்த 51 சவரன் தங்க காசுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கோடம்பாக்கம் ராகவன் காலனியில் 100 சவரன் நகைகளை கொள்ளையடித்ததை சிவா ஒப்புக்கொண்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். விருகம்பாக்கத்தில் 2 கடைகளிலும், வடபழனியில் ஒரு வீட்டிலும் இவர் கொள்ளையடித்திருப்பது தெரியவந்துள்ளது. சீர்காழி, புதுக்கோட்டை, மன்னார்குடி மற்றும் சென்னையில் கோடம்பாக்கம், பள்ளிக்கரணை காவல் நிலையங்களில் சிவா மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. சிவாவின் கூட்டளி ஒருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close