[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐயா நல்லகண்ணுவை சந்தித்தேன்; அவரை சந்தித்ததற்கான காரணம் அவரின் பெயரிலேயே உள்ளது- கமல்ஹாசன்
  • BREAKING-NEWS அரசியல் பிரவேசம் குறித்து விஜயகாந்திடம் பேசியபோது ‘நீங்களெல்லாம் வரணும்’ என கூறினார்- கமல்ஹாசன்
  • BREAKING-NEWS அரசியல் பயணத்தை கருணாநிதியிடம் சொன்னேன்; சிரிப்பு மூலம் வாழ்த்துகிறார் என்பதை புரிந்து கொண்டேன்- கமல்ஹாசன்
  • BREAKING-NEWS கமல்ஹாசனை ஆசிர்வாதம் செய்து அனுப்பிய விஜயகாந்த் தேர்தல் நேரத்தில் அவருடன் கூட்டணி குறித்து முடிவெடுப்பார் - பிரேமலதா விஜயகாந்த்
  • BREAKING-NEWS காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் உட்பட 44 அமைப்புகளுக்கு அழைப்பு
  • BREAKING-NEWS #JUSTIN தமிழக அரசின் அம்மா ஸ்கூட்டர் மானிய திட்டத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு
  • BREAKING-NEWS ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்டுவதன் மூலம் ஜோக்கர் என்பதை திமுகவினர் காட்டிக்கொள்கின்றனர்-ஹெச்.ராஜா

பழைய வண்ணாரப்பேட்டையில் பிரபல ரவுடி சரமாரியாக வெட்டிக்கொலை

palyavannarapettai-famous-rowdy-murder

சென்னையில் மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடி சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 

சென்னை புதுவண்ணாரப்பேட்டை, செல்லியம்மன் தெருவை சேர்ந்தவர் முருகன் என்கிற கேட் முருகன். இவருக்கு வனஜா என்ற பெண்ணுடன் திருமணமாகி  சாந்தி என்ற மகளும், கோகுல் என்ற மகனும் உள்ளனர். பிரபல ரவுடியான முருகன் மீது 2007ஆம் ஆண்டு பாட்சா என்கிற பாக்சர் பாட்சாவை கொலை செய்த வழக்கு, கொலை முயற்சி மற்றும் திருட்டு வழக்குகள் பல ஆர்.கே. நகர் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. இதற்கு முன்பு பழைய வண்ணாரப்பேட்டை சீனிவாசபுரத்தில் வசித்து வந்த முருகன், அங்கு போலீஸ் கெடுபிடி அதிகம் இருந்ததால் குடும்பத்துடன் புதுவண்ணாரப்பேட்டையில் வசித்துவந்துள்ளார்.

இருப்பினும் சீனிவாசபுரத்திற்கு அடிக்கடி செல்லும் முருகன், அவரது நண்பர்களுடன் சுற்றித் திரிவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் நேற்று மாலை நண்பரை பார்க்க சென்ற முருகனை வழிமறித்த 5 பேர் கொண்ட கும்பல் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் முருகனை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் அவரது தலை, கழுத்து, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த வெட்டு காயம் விழுந்ததுள்ளது. இதனால் அந்த இடத்திலேயே முருகன் ரத்தவெள்ளத்தில் சரிந்தார். பின்னர் தகவலறிந்து வந்த வண்ணாரப்பேட்டை போலீசார், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த முருகனை காப்பாற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி முருகன் உயிரிழந்தார். இதுதொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த போலீஸார், அதே பகுதியை சேர்ந்த மதன், கார்த்திக், ராமு, தினேஷ், சின்னு ஆகியோரை தேடி வருகின்றனர். இவர்கள் மீது செல்போன் பறிப்பு மற்றும் கொள்ளை சம்பங்களில் ஈடுபட்ட வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close