[X] Close
JUST IN
 • BREAKING-NEWS தமிழகத்தில் கல்வி புரட்சி செய்தவர் காமராஜர்: மாஃபா பாண்டியராஜன்
 • BREAKING-NEWS திண்டுக்கல் மாவட்டத்தில் ஜிகா வைரஸ் இருப்பதை அரசு கண்டுபிடித்துள்ளது: அமைச்சர் விஜயாஸ்கர்
 • BREAKING-NEWS கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்: தமிமுன் அன்சாரி
 • BREAKING-NEWS தமிழகத்தில் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
 • BREAKING-NEWS அப்போலோவில் ஜெயலலிதா இருந்தபோது நான் அவரை பார்க்கவில்லை: வெற்றிவேல்
 • BREAKING-NEWS சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் கல்லீரல் சிகிச்சை பிரிவில் மின்கசிவால் தீ விபத்து
 • BREAKING-NEWS விமானப் பயணத்திற்கு இனி அடையாள அட்டை தேவையில்லை..!
 • BREAKING-NEWS திருவள்ளூர் ஆட்சியர், தமிழக வருவாய் துறை செயலாளருக்கு இந்த மாத சம்பளம் வழங்க தடை
 • BREAKING-NEWS குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாநிலம் என்ற இலக்கை நோக்கி அரசு செல்கிறது: நிலோபர் கபில்
 • BREAKING-NEWS கிரிக்கெட் போட்டிகளில் புதிய விதிமுறைகள் செப்.28 க்கு பிறகு அமலுக்கு வரும் என ஐசிசி அறிவிப்பு
 • BREAKING-NEWS பா.ஜ.க.வுடன் கைகோர்க்கவும் தயார்: கமல்ஹாசன்
 • BREAKING-NEWS தீபாவளிக்கு வெளியூர் செல்ல அக்டோபர் 15 முதல் 17 வரை சிறப்புப் பேருந்துகள்: அமைச்சர் விஜயபாஸ்கர்
 • BREAKING-NEWS அக்டோபர் 3 ஆம் தேதி முதல் டெல்லி மெட்ரோ ரயில் கட்டணம் ரூ. 10 உயர்த்தப்படுகிறது
 • BREAKING-NEWS மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் ஜெனிபாவுக்கு கத்திக்குத்து
குற்றம் 23 Aug, 2017 02:18 PM

காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை? - குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தல்

youth-killed-in-love-affair-emphasis-to-arrest-the-culprit

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் வேறு சாதி பெண்ணை காதலித்தவரை, பெண்ணின் உறவினர்கள் அடித்து கொன்றுவிட்டதாக‌ புகார் எழுந்துள்ளது.

ஆண்டலாம்பேட்டை‌, பனந்தோப்பு பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் கார்த்திக். அவர் திருநாகேஸ்வரத்தில் இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கார்த்திக் கல்லூரி படிக்கும் போது, அதே கல்லூரியைச் சேர்ந்த மாணவியுடன் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரிடையேயும் காதல் தொடர்ந்த நிலையில், மாணவியின் பெற்றோருக்கு விஷயம் தெரிந்துள்ளது. இதையடுத்து மாணவியை உறவினர் நீலமேகம் என்பவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்துள்ளனர். நீலமேகம் திருச்சி குற்றப்புலனாய்வு துறையில் காவலராக பணியாற்றி வருகிறார். அவர் சில நாட்களுக்கு முன் கார்த்திக்கின் வீட்டிற்கு வந்து, அவர் மாணவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை கேட்டுள்ளார். தொடர்ந்து அவருடன் பேசி வந்த நீலமேகம், மாணவியை கார்த்திக்கிற்கே திருமணம் செய்து வைப்பதாகவும் கூறி வந்ததாக தெரிகிறது. நேற்று முன் தினம் கார்த்திக்கை மது அருந்த அழைத்துச்சென்ற நீலமேகம், கார்த்திக்கை அடித்து கொன்றுவிட்டு, தற்கொலை போல் சித்திரித்து விட்டதாக கார்த்திக்கின் பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யும்படி பலியான இளைஞரின் பெற்றோர் கேட்டுக்கொண்டுள்ளனர். 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close