[X] Close
JUST IN
 • BREAKING-NEWS எங்கள் பக்கம் நியாயம் இருந்ததால் இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது: முதலமைச்சர் பழனிசாமி
 • BREAKING-NEWS மருத்துவர்களின் சேவையை சிவப்புக் கம்பளத்துடன் வரவேற்கிறோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
 • BREAKING-NEWS ஆட்சி மாற்றம் விரைந்து நடக்க வியூகம் வகுப்போம் - ஸ்டாலின்
 • BREAKING-NEWS பள்ளி மாணவர்களுக்கு என தனி பேருந்தை ஏன் இயக்கக் கூடாது என அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி
 • BREAKING-NEWS புதுச்சேரியில் ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது
 • BREAKING-NEWS புதுச்சேரியில் சட்டப்பேரவை கூட்டம் சபாநாயகர் தலைமையில் தொடங்கியது
 • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு அரசு மருத்துவர்கள் இரண்டு பேர் ஆஜர்
 • BREAKING-NEWS நடிகர் விஷால் கூறுவது போல் அன்புச்செழியனுக்கு அமைச்சர்கள் ஆதரவு என்பதில் எந்த உண்மையும் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார்
 • BREAKING-NEWS கந்துவட்டி கொடுமையை சட்டமும் சினிமாத்துறையும் தடுத்தாக வேண்டும்: கமல்ஹாசன்
 • BREAKING-NEWS அன்புச்செழியன் போன்ற உத்தமர்கள் ஏனோ தவறாக சித்தரிக்கப்படுவது வேதனை: இயக்குநர் சீனுராமசாமி
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகரின் கூட்டாளி புல்கித் என்பவர் கைது
 • BREAKING-NEWS கந்துவட்டி தொடர்பாக பொதுமக்கள் அச்சமின்றி புகார் அளிக்க முன்வர வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தேர்தல் தேதியை இறுதி செய்ய 2 நாளில் டெல்லி செல்கிறார் ராஜேஷ் லக்கானி
 • BREAKING-NEWS கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களின் பட்டியலை தயார் செய்ய விஷால் உத்தரவு
குற்றம் 21 Aug, 2017 09:10 AM

பனியன் கடையில் ஒருலட்சம் பொருட்கள் திருட்டு - சிசிடிவி காட்சிகளை ஆராயும் போலீசார்

theft-in-garments-police-investigate-through-cctv-footage

திருப்பூரில் பனியன் கடையில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கொள்ளைப்போயுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடையிலிருந்த கண்காணிப்பு கேமராவின் பதிவை கொண்டு திருட்டில் ஈடுபட்ட பெண்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் லட்சுமி நகர் பகுதியில் டெல்லியை சேர்ந்த சந்தீப் சர்மா என்பவர் டி சர்ட்களுக்கு தேவையான பட்டன், ஜிப் ஆகியவற்றை மொத்தமாக விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடையின் பின்புறம் உள்ள குடோனில் விற்பனைக்கு தேவையான பொருட்களை மொத்தமாக இருப்பு வைத்துள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு குடோனின் பூட்டை உடைத்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான ஜிப் மற்றும் பட்டன்களை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். இதனையடுத்து திருப்பூர் வடக்கு காவல்நிலையத்தில் கடையின் உரிமையாளர் சந்தீப் சர்மா புகாரளித்தார். 

வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சந்தீப் சர்மாவின் கடைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவின் பதிவை ஆய்வு செய்கையில் அதிகாலை 5 மணியளவில் மூன்று
பெண்கள் குடோனின் உள்ளே வந்து கண்காணிப்பு கேமராவை வேறு பக்கம் திருப்பியுள்ளது பதிவாகியிருந்தது. இதனை அடிப்படையாக கொண்டு கேமராவில் பதிவாகியிருந்த பெண்கள் பொருட்களை திருடி சென்றிருக்கலாம் என்கின்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு அப்பெண்களை தேடி வருகின்றனர். இதே நிறுவனத்தில் கடந்த ஜனவரிமாதம் அறுபதாயிரம் மதிப்பிலான பொருட்கள் திருடு போயிருப்பதாகவும் நிறுவன உரிமையாளர் தெரிவித்தார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:

[X] Close