[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை
  • BREAKING-NEWS திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்
  • BREAKING-NEWS மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி
  • BREAKING-NEWS நீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்

நடிகர் திலீப்புக்கு நீதிமன்றக் காவல் மீண்டும் நீட்டிப்பு

extension-of-judicial-custody-to-actor-dileep

நடிகை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் கைதான மலையாள நடிகர் திலீப்பின் நீதிமன்றக் காவலை மீண்டும் நீட்டித்து அங்கமாலி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபல நடிகை கடத்தப்பட்டு பாலியல் வன்முறை செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் நடிகர் திலீப் ஜூலை 10-ம் தேதி கைது செய்யப்பட்டு கொச்சி ஆலுவா கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக சிறையில் உள்ள அவருக்கு சிறப்பு வசதி எதுவும் அளிக்கப்படவில்லை. இதனால் மன அழுத்தம், திலீப்பை கடுமையாக பாதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, திலீப்பின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், காணொலி காட்சி மூலம் அங்கமாலி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் திலீப் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு, வரும் ஆகஸ்ட் 22-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். முன்னதாக, டாக்டர் நிஜி வர்கீஸ் ஜோஷி தலைமையிலான மருத்துவக் குழு திலீப்பின் உடல்நிலை குறித்து பரிசோதனை செய்து உடல்நிலை சீராக இருப்பதாக அறிக்கை தாக்கல் செய்தது. இதனைத் தொடர்ந்து அவரது நீதிமன்றக் காவல் இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜூலை 25-ஆம் தேதியுடன் நீதிமன்றக் காவல் முடிவடைந்த நிலையில் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டது. தற்போது இரண்டாவது முறையாக ஆகஸ்ட் 22-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.


 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close