[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 4 மக்களவை, 11 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று தேர்தல்
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: காயமடைந்தவர்களுடன் துணை முதல்வர் சந்திப்பு
  • BREAKING-NEWS கர்நாடக எம்எல்ஏ கார் விபத்தில் உயிரிழந்தார்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் மீண்டும் இணைய சேவை
  • BREAKING-NEWS டெல்லி- மீரட் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை திறப்பு
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை: அமைச்சர் கடம்பூர் ராஜு
  • BREAKING-NEWS இயல்பு நிலைக்கு திரும்புகிறது தூத்துக்குடி

மகளிடம் தவறாக நடக்க முயன்ற தந்தை: தடுக்க முயன்ற மனைவியை கொன்றார்

father-behave-wrongly-daughter-killed-his-wife

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே பெற்ற மகளையே குடிபோதையில் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற தந்தை தன்னைத் தடுக்க முயன்ற மனைவியையும் மகளையும் அடித்துக் கொலை செய்துள்ளார்.

அஞ்செட்டியில் வசிக்கும் ஓட்டுநர் சேஷாத்திரிக்கு குமுதா என்ற மனைவியும் மூன்று மகள்களும் உள்ளனர். நேற்று நள்ளிரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த சேஷாத்ரி தனது‌ 10 ஆம் வகுப்பு படிக்கும் மூத்த மகளை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றிருக்கிறார். அதைக்கண்டு தடுத்த அவரது மனைவி குமுதாவுக்கும் சேஷாத்திரிக்கும் கடும் சண்டை நடந்துள்ளது.

அதையடுத்து ஆத்திரமடைந்த சேஷாத்திரி அம்மிக்கல்லை எடுத்து மனைவி மற்றும் மகளின் தலையில் தாக்கியிருக்கிறார். அதில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தாய் மற்றும் மகளின் உடலை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் கொலையாளி சேஷாத்ரி அஞ்செட்டி காவல்நிலையத்தில் சரணடைந்தார். 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close