[X] Close
JUST IN
 • BREAKING-NEWS இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு
 • BREAKING-NEWS அரவக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ செந்தில் பாலாஜியை காணவில்லை என போலீசில் புகார்
 • BREAKING-NEWS ரிசார்ட்ஸில் தங்கியிருப்பது ஏன்? தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ விளக்கம்
 • BREAKING-NEWS ரூ. 200 நோட்டுக்கான மாதிரியை வெளியிட்டது ரிசர்வ் வங்கி; நாளை முதல் புழக்கத்திற்கு வரும்
 • BREAKING-NEWS ரூ.1500 ஜியோ போனுக்கான முன்பதிவு இன்று மாலை 5 மணிக்கு தொடக்கம்
 • BREAKING-NEWS சமூகநீதியை தடுக்கவே நீட் தேர்வை பாஜக ஆட்சி கொண்டுவந்துள்ளது: ஸ்டாலின்
 • BREAKING-NEWS தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் தனபாலுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
 • BREAKING-NEWS அதிமுகவின் எந்த அணியிலும் நான் இல்லை: அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி
 • BREAKING-NEWS ’விவேகம்’ பாடல் காட்சிகள் இணையத்தில்‌ லீக்!
 • BREAKING-NEWS தனிமனித ரகசியம் காப்பது அடிப்படை உரிமையே என ஆதார் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு
 • BREAKING-NEWS எதிர்காலத்தில் தமிழக மாணவர்கள் வளர்ச்சி விண்ணை முட்டும் வகையில் இருக்கும்: செங்கோட்டையன்
 • BREAKING-NEWS புதுச்சேரியில் டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியுள்ள சொகுசுவிடுதிக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு
 • BREAKING-NEWS விவேகம் படம் வெளியான நிலையில் அஜித் மற்றும் படக்குழுவினருக்கு கமல்ஹாசன் வாழ்த்து
 • BREAKING-NEWS ரூ.2000 நோட்டுகளுக்கு தடையா?
குற்றம் 19 Jul, 2017 07:24 PM

வரதட்சணை கேட்டு பெண் கொலை: டாக்டர் கணவரின் குடும்பமே கைது

woman-asked-for-dowry-and-killed-the-woman-doctor-s-husband-s-family-was-arrested

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வ‌ரதட்சணை கொடுமையால் பெண்ணை கொன்ற குற்றச்சாட்டில் டாக்டர் குடும்பமே கைது செய்யப்பட்டுள்ளது. 

மன்னார்குடியைச் சேர்ந்த இளஞ்சேரன் என்ற டாக்டருக்கும், திவ்யா என்ற பெண்ணுக்கும் கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.‌ இளஞ்சேரன் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இந்தத் தம்பதிக்கு இரண்டரை வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் சந்தேகத்திற்கு இடமான வகையில் திவ்யா இறந்து கிடந்தார். அவது உடலில் காயங்கள் இருந்தன.
இதனிடையே, திவ்யாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும் அவரது உறவினர்கள் நேற்று 7 மணிநேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மன்னார்குடி காவல்நிலையத்திலும், ஆர்டிஓவிடமும் புகார் அளித்திருந்தனர். 
இந்நிலையில், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக மாமனார், மாமியார் மற்றும் டாக்டர் இளஞ்சேரனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மகளுக்காக 100 சவரன் நகை, மணமகன் கார் வாங்க 15 லட்சம் உட்பட 30 லட்ச ரூபாய் ரொக்கம், 5 கிலோ வெள்ளி என திவ்யா குடும்பத்தினர் வரதட்சணை கொடுத்திருந்தனர். ஆனால், மகன் டாக்டர் என்பதால் கூடுதலாக பத்து லட்சம் தர வேண்டும் என்று ஒரு வாரமாக தொல்லை தந்து வந்ததாகவும், பத்து லட்சம் பணம் வாங்கி வராததால் திவ்யாவை இளஞ்சேரன் குடும்பத்தினர் அடித்துக் கொன்றதாகவும் தெரியவந்துள்ளது. 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close