[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் குடியரசத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா தொடங்கியது
  • BREAKING-NEWS பாஜக, காங்கிரஸ் அல்லாத மாற்று அணியை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்- தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்
  • BREAKING-NEWS 2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு
  • BREAKING-NEWS இந்தியாவிலேயே குறைந்த கட்டணத்தில் பேருந்து சேவையை தமிழக அரசு வழங்கி வருகிறது - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS டெல்லியில் மார்ச் 23ஆம் தேதி பாஜக நாடாளுமன்ற குழுக்கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS ஈரோடு: சித்தோடு அருகே தயிர்பாளையத்தில் வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் 3 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS தினகரனை சிகரத்திற்கு கொண்டு செல்ல என் சிறகுகளை நான் அசைத்தேன்- நாஞ்சில் சம்பத் ட்வீட்

சொத்து தகராறு: சிறுமிகள் உட்பட 4 பேர் எரித்துக்கொலை!

4-of-a-family-burnt-to-death-over-property-dispute

சொத்து தகராறு காரணமாக, நான்கு பேர் உயிரோடு எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பீகார் மாநிலம் கதிகார் மாவட்டத்தில் உள்ள கவுண்டி கிராமத்தை சேர்ந்தவர் மனோஜ்குமார். இவரது தம்பி கேதர் சிங் (45). இவர்கள் இருவருக்கும் சொத்து தகராறு இருந்து வந்தது. இதன் காரணமாக அடிக்கடி சண்டை. இந்நிலையில் நேற்றிரவு கேதர் சிங் தனது மனைவி பிரதிமா தேவி, மகள்கள் டிம்பிள் குமார் (15), சோனி குமாரி (17) ஆகியோருடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். இவர்கள் அனைவரும் ஒரே அறையில் படுத்திருக்க, மற்றொரு அறையில் மகன் லக்‌ஷ்மண் குமார் சிங் (12) படுத்திருந்தார். 

இந்நிலையில் நள்ளிரவில் வீடு தீப்பிடித்து எரிந்ததை அடுத்து லக்‌ஷமண் குமார் வெளியே ஓடிவந்துள்ளார். பிறகுதான் அடுத்த அறையில் படுத்திருந்த அப்பா, அம்மா, சகோதரிகள் அனைவரும் தீயில் சிக்கிக்கொண்டனர் என்பது தெரிய வந்தது. பின்னர் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்துள்ளனர். இதில் பிரதிமா தேவியும் மகள்களும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாயினர். பலத்த காயமடைந்த கேதர் மருத்துவமனையில் பலியானார். 

அனாதையாகி விட்ட லக்‌ஷ்மண் குமார் போலீசில் கொடுத்த புகாரில், ‘சொத்து தகராறு காரணமாக பெரியப்பா அடிக்கடி எங்களுடன் சண்டை போடுவார். சொத்தை பிரித்து விற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். என் தந்தை மறுத்ததால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டினார். சொன்னபடியே தீ வைத்து எங்கள் குடும்பத்தினரைக் கொன்றுவிட்டார்’ என்று தெரிவித்துள்ளார். தப்பியோடிவிட்ட மனோஜை போலீசார் தேடிவருகின்றனர்.

சொத்து தகராறு காரணமாக நான்கு பேர் உயிரோடு எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close