[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜன. 12 இல் ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு நாளை மறுநாள் நடைபெறும்
  • BREAKING-NEWS 2ஜி விவகாரத்தில் ஆ.ராசா எழுதிய ‘தி 2ஜி சாகா அன்ஃபோல்ட்ஸ்’ என்ற புத்தகம் டெல்லியில் வெளியீடு
  • BREAKING-NEWS பேருந்து கட்டணத்தை உயர்த்தியது தமிழக அரசு; நாளை முதல் அமலுக்கு வருகிறது
  • BREAKING-NEWS மூத்த குடிமக்கள், 8 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பாஸ்போர்ட் கட்டணம் 10% குறைக்கப்படும் - சுஷ்மா ஸ்வராஜ்
  • BREAKING-NEWS டெல்லியில் சுஷ்மா ஸ்வராஜை புரட்சித்தலைவி அம்மா என்று அழைத்து மகிழ்வேன் - புதுச்சேரி முதலமைச்சர்
  • BREAKING-NEWS பெண்களுக்கான அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் வாகனம் பெறுவதற்கு விண்ணப்பிக்க ஆதார் அவசியம் - அரசு
  • BREAKING-NEWS மாணவர் சரத்பிரபுவின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
குற்றம் 17 Jul, 2017 01:19 PM

எங்கே என் மகளின் இதயம்? 5 வருடமாக தவிக்கும் குடும்பம்!

mumbai-girl-s-murder-probe-halted-after-heart-goes-missing

மர்மமாக இறந்து போன தங்கள் மகளின் இதயத்தைத்தேடி ஒரு குடும்பம் 5 வருடமாகப் போராடி வருவது பரிதாபத்தை அளித்துள்ளது.

மும்பை லோகேஸ்வரியை சேர்ந்தவர் லஸிக் ஜியா ஹாசன். இவர் மனைவி நாகினா ஹாசன். இவர்கள் மகள் சனம் ஹாசன். வயது 19. புனேவில் வாடகைக்கு ரூம் எடுத்து தங்கி படித்துவந்தார். கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் அதாவது 2012-ம் ஆண்டு தனது தோழிகளுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய சனம், அன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இறந்ததற்கு காரணமாக, மருத்துவ அறிக்கைச் சொன்னதை கேட்டு சனமின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் சனம் உடலில் ஆல்கஹால் கலந்திருந்ததாகவும் அதன் காரணமாக இதயத்துக்குச் செல்லும் ரத்தம் நின்று போனதாகவும் அவர் பாலியல் வன்முறை செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.

இதை நம்ப சனமின் பெற்றோர் தயாராக இல்லை. ஏனென்றால், சனம் புட்பால் வீராங்கனை. இறப்பதற்கு காலையில் கூட நன்றாக உடற்பயிற்சி செய்திருக்கிறார். அதோடு மதுப்பழக்கம் அவருக்கு சுத்தமாக கிடையாது.
இதை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். விசாரித்தது சிபிஐ, சனத்தின் இதயத்தை பரிசோதனை செய்தது. அங்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. அது ஆணின் இதயம் என்றும் இதுபெண்ணுக்கானது இல்லை என்றும் கூறப்பட்டது. 

பிறகு என் மகளின் இதயம் எங்கே? என்று அவரது பெற்றோர் கேட்டனர். பின், டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கப்பட்டது. அந்த இதயத்துக்கும் சனத்தின் பெற்றோரிடம் இருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏவுக்கும் தொடர்பே இல்லை. இதையடுத்து விவகாரம் மேலும் பரபரப்பானது. பின்னர் ஐதராபாத்தில் உள்ள லேபுக்கு இதயம் அனுப்பப்பட்டது. அங்கு இன்னொரு அதிர்ச்சி. பரிசோதித்த டாக்டர்கள், இது பெண்ணுக்கான இதயம்தான். ஆனால், வயதான பெண்ணின் இதயம் என்றனர்.

‘செல்வாக்குள்ள ஒருவர் எங்கள் மகளின் இறப்பில் நேரடியாகவோ மறைமுகமாகவோ சம்பந்தப்பட்டிருக்கிறார் என சந்தேகப்படுகிறோம். மருத்துவ அறிக்கைகள் எங்கள் மகள் இதயம் இல்லை என்பது உறுதி செய்திருக்கின்றன. பதப்படுத்தப்பட்ட வேறு யாரோ ஒருவரின் இதயத்தைக் கொண்டு வைத்து ஏமாற்றியுள்ளனர். இதற்கு வலுவான காரணம் இருக்கிறது. அப்படியென்றால் என் மகளின் இதயம் எங்கே?’ -கேட்கிறார் சனமின் அம்மா நாகினா.
சில மர்மங்களுக்கு முடிவுகளே கிடையாது போலிருக்கிறது. 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close