[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இன்று சென்னை வருகிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்
  • BREAKING-NEWS தொடர்ந்து வென்று ஃபைனலில் தோற்றது தூத்துக்குடி
  • BREAKING-NEWS அணிகள் இணைப்பு குறித்து இன்று நண்பகல் 12 மணிக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
  • BREAKING-NEWS மழை காரணமாக குற்றால அருவிகளில் குளிக்கத் தடை
  • BREAKING-NEWS பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.01 , டீசல் விலை லிட்டருக்கு ரூ.61.01
  • BREAKING-NEWS சென்னை எழும்பூரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன் நடிகர் விஷால் சந்திப்பு
  • BREAKING-NEWS மதுரையில் ரூ.1 கோடி மதிப்புள்ள பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
  • BREAKING-NEWS இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி
  • BREAKING-NEWS ரஜினிகாந்த் தேர்தலில் வெற்றிபெற்று கோட்டையில் முதலமைச்சராக அமரும் நாள் வரும்: தமிழருவி மணியன்
  • BREAKING-NEWS சென்னையில் பழமையான கார், இருசக்கர வாகனங்களின் கண்காட்சி
  • BREAKING-NEWS அதிமுக அரசு விரைவில் ஜனநாயக ரீதியில் வீழ்த்தப்படும்: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஆட்சி நிர்வாகத்தில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்: திருமாவளவன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் பேரவையை கலைத்துவிட்டு தேர்தலை நடத்த வேண்டும்: கார்த்தி சிதம்பரம்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: முதுகுளத்தூர் - கடலாடி காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு
குற்றம் 12 Jun, 2017 10:15 AM

"சுட்டுக்கொல்வோம்...... கண்டுக்காதீங்க" - ஆந்திர போலீசார் பகிரங்க கடிதம்

andhra-police

செம்மர கடத்தலில் ஈடுபட முயன்ற நபர்களை சுட்டுக்கொன்றால், போலீசார் மீது சட்டரீதியான விசாரணை நடத்த கூடாது என ஆந்திர அரசுக்கு அம்மாநில ஐஜி கடிதம் எழுதியுள்ளார்.

ஆந்திர மாநில அரசுக்கு செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு அதிரடிப் படை ஐஜி கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், செம்மர கடத்தலின் போது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினால் அது பற்றி விசாரிக்க உத்தரவிடக் கூடாது என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அந்த கடிதத்தில், கடத்தல்காரர்களால் காவலர்கள் தாக்கப்படுவதை தடுக்க பதில் தாக்குதலுக்கு அனுமதிக்க வேண்டும். செம்மரக் கடத்தல் தடுப்பு போலீசார் மீது சட்ட விசாரணை கிடையாது என்று அறிவிக்க வேண்டும். வனப்பகுதியில் பணியாற்றும் போலீசாருக்கு சட்டப்பாதுகாப்பு தர வேண்டும் எனவும் அக்கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் வனப்பகுதியில் பணியாற்றும் போலீசார் பதில் தாக்குதல் நடத்தும் போது சம்பந்தப்பட்ட நபர் உயிரிழந்தால் காவலர்கள் மீது சட்ட விசாரணை நடத்தக் கூடாது என்றும் பகிரங்கமாகவே அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் செம்மரம் கடத்தியதாக திருப்பதி வனப்பகுதியில் திருவண்ணாமலை, கிருஷ்ணாகிரி, தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் அடிக்கடி ஆந்திர போலீசால் கைது செய்யப்பட்டு வருவதாகவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close