[X] Close
JUST IN
 • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சியின் தலைவராக முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார் ராகுல் காந்தி
 • BREAKING-NEWS ஆளுநரின் ஆய்வு அவரது அதிகாரத்துக்கு உட்பட்டது
 • BREAKING-NEWS தூத்துக்குடி அருகே கடலில் நாட்டுப்படகு பழுதாகி மூழ்கியதில் மீனவர் கென்னடி உயிரிழப்பு
 • BREAKING-NEWS நீர்மட்டம் குறைந்ததால் வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு நீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டது
 • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீராகாததால் 16வது நாளாக குளிக்க தடை விதிப்பு
 • BREAKING-NEWS அண்ணா அறிவாலயத்திற்கு திமுக தலைவர் கருணாநிதி வருகை
 • BREAKING-NEWS டிடிவி தினகரன் யார்?, கட்சியின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லை: முதலமைச்சர் பழனிசாமி
 • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் திமுக வேட்பாளரை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பரப்புரை
 • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் திமுக வேட்பாளரை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பரப்புரை
 • BREAKING-NEWS உடல்நலன் கருதி அரசியலில் இருந்து விலக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி முடிவெடுத்திருப்பதாக தகவல்
 • BREAKING-NEWS ராஜஸ்தானில் கொள்ளையன் நாதுராமின் கூட்டாளிகள் 4 பேர் கைது
 • BREAKING-NEWS வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்படும் செல்போன், டிவிக்கான சுங்கவரி 10% இருந்து 20% உயர்வு- மத்திய அரசு
 • BREAKING-NEWS அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைக்க 2018 மார்ச் 31 வரை அவகாசம்- உச்சநீதிமன்றம்
 • BREAKING-NEWS கடலூரில் ஆய்வு மேற்கொள்ள சென்ற ஆளுநர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி பேரணி
குற்றம் 31 May, 2017 09:37 AM

சிறுமியை பலாத்காரம் செய்த முதியவர்.. கருக்கலைப்பு செய்த போலி டாக்டர் கைது

child-raped-near-ambur

ஆம்பூர் அருகே 14 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்த போலி டாக்டர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தலைமறைவான வாழைப்பழ வியாபாரியை போலீசார் தேடிவருகின்றனர்.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உமராபாத் பகுதியை சேர்ந்தவர் சலீம் (வயது 65). இவர் அதே பகுதியில் வாழைப்பழ வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு ஷாகீரா என்ற மனைவியும், 9 பிள்ளைகளும் உள்ளனர். இதில் 5 பேருக்கு திருமணம் நடந்துள்ளது. மீதமுள்ள 4 பேருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இந்நிலையில் சலீம் அதே பகுதியில் உள்ள அவரது தூரத்து உறவினரான ஒருவர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். உறவினர் வேலைக்கு செல்லும் நேரத்தை பார்த்து வீட்டில் தனியாக இருந்த அவரது மகளை(வயது 14) பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் சலீம்.

இந்தநிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன் தீடீரென சிறுமிக்கு வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. பின்னர் அவரது பெற்றோர் அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு (போலி மருத்துவர் என தெரியாமல்) அழைத்து சென்று ஜெயபால் என்பவரிடம் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இருப்பினும் வயிற்றுவலி குறையாததால் மருத்துவர் ஸ்கேன் எடுத்து வரச்சொல்லி இருக்கிறார். இதனையடுத்து சிறுமி 6 மாத கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்த ஜெயபால், உடனடியாக சிறுமிக்கு அவசர, அவசரமாக கருக்கலைப்பும் செய்துள்ளார்.

இது குறித்து சிறுமியின் தந்தை  உமராபாத் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். அரசு விதிகளை மீறி கருக்கலைப்பு செய்த போலி மருத்துவர் ஜெயபால் மற்றும் பேர்ணம்பட்டு பகுதியை சேர்ந்த ஜெயலட்சுமி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தப்பியோடிய வாழைப்பழ வியாபாரி சலீமை போலீசார் தேடி வருகின்றனர். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close