[X] Close
JUST IN
 • BREAKING-NEWS மெர்சல் திரைப்படத்தில் முக்கிய பிரச்னைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது; படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்: ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி
 • BREAKING-NEWS கீழடியில் 4ஆம் கட்ட அகழாய்வு பணி விரைவில் தொடங்கும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
 • BREAKING-NEWS பேரறிவாளனுக்கான பரோல் அனுமதியை மேலும் 6 மாத காலத்துக்கு நீட்டிக்க வேண்டும்: திருமாவளவன்
 • BREAKING-NEWS ஆசியக்கோப்பை ஹாக்கி போட்டி: மலேசிய அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம்
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்ன விவகாரத்தில் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி: கே.பி.முனுசாமி
 • BREAKING-NEWS முதலமைச்சர் நாற்காலியை அடைவதோ; அதை பறிகொடுத்து தர்மயுத்தம் நடத்த வேண்டியது திமுகவில் கிடையாது: ஸ்டாலின்
 • BREAKING-NEWS அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சில் அதிமுகவை யார் ஆள்வது என்பது தெரிகிறது: சீமான்
 • BREAKING-NEWS திருவள்ளூர்: பொன்னேரியில் அசுத்தமாக இருந்த 4 திருமண மண்டபங்களுக்கு தலா ரூ.50,000 அபராதம்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதியில் 10 ஆயிரம் போலி வாக்காளர்களை நீக்க வேண்டும்: ஸ்டாலின்
 • BREAKING-NEWS சேலத்தில் டெங்கு கொசு உருவாக காரணமான தனியார் மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் அபராதம்
 • BREAKING-NEWS மெர்சல் படத்தின் வசனங்கள் மக்கள் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது: நாராயணசாமி
 • BREAKING-NEWS விஜய்யை வளைத்து அரசியல் செய்கிறோமா? தமிழிசை
 • BREAKING-NEWS விழுப்புரம்; கள்ளக்குறிச்சி கோமுகி, மணிமுக்தா அணைகளில் இருந்து நீர் திறப்பு
குற்றம் 25 May, 2017 11:31 AM

அத்தையை கொன்று டிராக்டரில் நசுக்கிய மருமகன்!

two-murdered-in-trichy

கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் அத்தை மற்றும் அவர் மகனை அடித்துக்கொன்ற மருமகனை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது வெங்கடாஜலபுரம் ஊராட்சி. இதன் முன்னாள் தலைவர் ராமசாமி. இவர் தனது தங்கை தனபாப்புவிடம் கடன் கேட்டாராம். அண்ணனுக்காக சிலரிடம் கடன் வாங்கி ரூ. 10 லட்சத்துக்கும் மேல் கொடுத்தார் தனபாப்பு. இந்நிலையில் ராமசாமி சில வருடங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். தந்தை உயிரிழந்ததால் அவர் மகன் ராஜகோபால் மனநிலை பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின் இப்போது நல்ல நிலையில் இருக்கிறார்.

இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் தனபாப்புவிடம், பணத்தைத் திருப்பிக் கேட்டுள்ளனர். தனபாப்பு தனது அண்ணன் மகன் ராஜகோபாலிடம் கேட்டுள்ளார். அவர் தருகிறேன் என்று சொன்னாராம். அடிக்கடிக் கேட்டு வற்புறுத்தினாராம் தனபாப்பு.

இதனால் கோபமான ராஜகோபால், தனபாப்பு வீட்டுக்கு நேற்று முன் தினம் வந்துள்ளார். வீட்டில் அத்தை தனபாப்பும் அவர் மகன் சத்தியமூர்த்தியும் தூங்கிக்கொண்டிருந்தனர். இருவரையும் இரும்பால் தலையில் அடித்து கொலை செய்த ராஜகோபால், இருவரது சடலத்தையும் வீட்டிற்கு வெளியே கொண்டு வந்து டிராக்டரில் ஏற்றி நசுக்கியுள்ளார்.

பின்னர் வீட்டின் வாசல் முன்பு சடலங்களை போட்டுவிட்டு, டிராக்டரையும் விட்டு விட்டு தப்பியோடினார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடல்களை ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். ராஜகோபாலை தேடி வருகின்றனர். சொந்த மருமகனே அத்தையை கொன்ற சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close