[X] Close
JUST IN
 • BREAKING-NEWS சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி நாளிதழ் அலுவலகத்திற்கு வந்தார் கருணாநிதி
 • BREAKING-NEWS கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதை நான் ஆதரிக்கிறேன்: ஓவியா
 • BREAKING-NEWS ஆசிய கோப்பை ஹாக்கி: மலேசிய அணிக்கு எதிரான சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி
 • BREAKING-NEWS நிலவேம்பு குடிநீர் குறித்து பேசுவதற்கு கமல் மருத்துவரோ, விஞ்ஞானியோ கிடையாது: கடம்பூர் ராஜூ
 • BREAKING-NEWS டெங்கு கொசுக்களை ஒழிப்பதற்கு மக்களின் ஒத்துழைப்பு தேவை: சுகாதாரத்துறை செயலர்
 • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: எல்லையில் ராணுவ உடையில் வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார் பிரதமர் மோடி
 • BREAKING-NEWS ஜப்பான் நாட்டின் தெற்கு பகுதியில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவு
 • BREAKING-NEWS நிலவேம்பு கசாயம் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் கமலுக்கு அரசு சித்த மருத்துவர்கள் கண்டனம்
 • BREAKING-NEWS 15 நாட்களில் டெங்கு காய்ச்சல் முழுவதும் கட்டுப்படுத்தப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர்
 • BREAKING-NEWS தீபாவளி டாஸ்மாக் மது விற்பனை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 20%குறைந்தது
 • BREAKING-NEWS வித்தியாசமாக பேச வேண்டும் என்பதற்காகவே நிலவேம்பு கசாயம் குறித்து கமல்ஹாசன் கருத்து கூறியுள்ளார்: இல.கணேசன்
 • BREAKING-NEWS மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா தொடர்பான காட்சிகளை நீக்க வேண்டும்: தமிழிசை
 • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீரில் காலை 6.40 மணியளவில் நில அதிர்வு- ரிக்டர் அளவு கோலில் 4.7ஆக பதிவு
 • BREAKING-NEWS தஞ்சை மாவட்டத்தில் 34 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்: ஆட்சியர் அண்ணாதுரை
குற்றம் 23 May, 2017 10:11 PM

என்ன ஒரு துணிச்சல்... கும்பலாக வந்து கொள்ளையடித்த குடும்பம்!

robbery-in-textile-shop-cctv-footage

திண்டுக்கல்லில் ரெடிமேட் துணிக்கடையில் குடும்பத்துடன் நுழைந்த கொள்ளை கும்பல் 50-க்கும் மேற்பட்ட ஆடைகளை திருடிச் சென்றுள்ளனர். சிசிடிவி கேமராவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே மெங்கில்ஸ் ரோடு சாலையில் கோயம்புத்தூரை சேர்ந்த அர்ஜீன் என்பவருக்கு சொந்தமான ரெடிமேட் துணிக்கடை உள்ளது. இந்த கடையை அர்ஜீன் உறவினரான திண்டுக்கல்லை சேர்ந்த ராஜேஸ் மற்றும் அவரது மனைவியும் பராமரித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை சுமார் 11.30 மணிக்கு 2 பெண்கள், கை குழந்தை, மற்றும் 3 ஆண்கள் கடைக்கு வந்துள்ளனர். கடையில் ராஜேஸ் மற்றும் அவரது மனைவியும் இருந்துள்ளனர். அவர்களிடம் ஆடைகள் எடுப்பதாக கூறி கணவன், மனைவி இருவரையும் தனித்தனியாக பிரித்து ஆடைகளை பார்ப்பது போல் நடித்துள்ளனர். இதனிடையே ஒரு பெண் கடையில் இருந்து ஆடைகளை அருகில் இருந்த சேர் மேல் வைத்துள்ளார். கையில் குழந்தை வைத்திருந்த மற்றொரு பெண் குழந்தையை கீழே இறக்கி விட்டு 50-க்கும் மேற்பட்ட ஆடைகளை எடுத்து தனது சேலையில் மறைத்து விட்டு மீண்டும் குழந்தையை தோளில் தூக்கி விட்டு வெளியே சென்று போது டேபிள் மேல் விற்பனைக்காக வைத்திருந்த மணி பர்சை குழந்தை தெரியாமல் கையில் எடுத்து சென்றது. பர்சை எடுத்து விட்டு அதற்கு உரிய கவரை மட்டும் டேபிள் மேல் வைத்துள்ளனர்.

கொள்ளை குடும்பத்தினர் அனைவரும் ஒரு ஆடையை எடுத்து விட்டு அதற்கு உரிய பணத்தையும் செலுத்தி விட்டு சென்றுள்ளனர். பின்னர் கடையில் இருந்த கணவன், மனைவி இருவரும் டேபிள் மேல் வைத்திருந்த பர்சை காணவில்லை என்று தேடி பார்த்துள்ளனர். அப்பொழுது கடையில் இருந்து சி.சி.டி.வி கேமரா மூலம் பர்ஸ் எப்படி தொலைந்தது என்று பார்த்த பொழுது குடும்பத்துடன் வந்தவர்கள் 50-க்கும் மேற்பட்ட ஆடைகளை திருடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜேஸ் மற்றும் அவரது மனைவி திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close