JUST IN
  • BREAKING-NEWS ரம்ஜான் அன்று டெல்லியில் தாக்குதல் நடக்கலாம்: உளவுத்துறை
  • BREAKING-NEWS சென்னை: தி.நகர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், பம்மல், உள்ளிட்ட பகுதிகளில் மழை
  • BREAKING-NEWS எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 8 தமிழக மீனவர்கள் கைது
  • BREAKING-NEWS திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, பள்ளிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS அதிமுகவை பினாமி ஆட்சி என திமுக சொல்வது வேடிக்கையாக உள்ளது: தம்பிதுரை
  • BREAKING-NEWS 55 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் ஜூலை 7ஆம் தேதி நடைபெறுகிறது
  • BREAKING-NEWS இஸ்லாமியர்களுக்கு இஃப்தார் விருந்து அளித்தார் பிரணாப் முகர்ஜி
  • BREAKING-NEWS அமெரிக்காவுடனான நட்புறவால் இந்தியா பயன்பெறும்: மோடி
  • BREAKING-NEWS திருச்சி சிறையில் அடிப்படை வசதிகள் இல்லை எனக்கூறி இலங்கை அகதிகள் உண்ணாவிரதம்
  • BREAKING-NEWS புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் இஸ்லாமியர்களுக்கு கிரண்பேடி இஃப்தார் விருந்து அளித்தார்
  • BREAKING-NEWS 10ஆம் வகுப்பு மறுகூட்டல் மதிப்பெண் பட்டியல் www.dge.tn.gov.inஇல் வெளியீடு
  • BREAKING-NEWS பாகிஸ்தானில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பில் 10 பேர் பலி, 50 பேர் காயம்
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா வழக்கு - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா வழக்கு - காவல்துறை சி.டி.ஆதாரத்தை தாக்கல் செய்தது
குற்றம் 16 May, 2017 10:39 PM

5 ஆண்டுகளில் பல சிறுமிகளை மயக்கி கற்பழித்த சகோதரர்கள்

Cinque Terre

இங்கிலாந்தில் 5 வருடங்கள் தொடர்ந்து பல சிறுமிகளை கற்பழித்த தமிழகத்தைச் சேர்ந்த சகோதரர்களுக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள வல்லசி நகரை சேர்ந்த இளவரசன் (26) என்பவரும் விகன் நகரை சேர்ந்த வினோதன் ராஜேந்திரம் (27) என்பவரும் சகோதரர்கள் ஆவர். தமிழர்களான இருவரும் கடந்த 2010 முதல் 2016 ஆம் ஆண்டு வரை வால்டன் மற்றும் கார்ஸ்டன் நகரங்களில் உள்ள வணிக மையங்களில் பணிபுரிந்து வந்துள்ளனர்.

இந்த காலக்கட்டத்தில் இவர்களது கடைகளுக்கு வந்த சிறுமிகளிடம் அன்பாகவும், பாசமாகவும் இருப்பது போல் நடித்து, சிறுமிகளுக்கு இலவசமாக இனிப்புகள், அவர்களது செல்போன்களுக்கு இலவசமாக ரீ-சார்ஜ் செய்வது உள்ளிட்ட உதவிகளை செய்து அவர்களை கவர்ந்துள்ளனர்.

இருவரின் மீதும் நம்பிக்கை கொண்ட 9 சிறுமிகள் அவர்களது கடைகளுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர். சிறுமிகளுடன் இருவரும் அடிக்கடி வெளியே சென்று வந்துள்ளனர். இந்நிலையில், 14 மற்றும் 15 வயதுடைய சிறுமிகளை சகோதரர்கள் இருவரும் காரில் அழைத்துச் சென்று, ஆட்கள் நடமாட்டம் இல்லாத குடியிருப்பு ஒன்றிற்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு மது கொடுத்து ஆசை வார்த்தைகள் கூறி உறவு வைத்துள்ளனர். சுமார் 5 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுமிகளை இந்த சகோதரர்கள் பலாத்காரம் செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இருவரும் செய்த குற்றங்கள் தெரிய வந்ததும், போலீசார் கைது செய்து லிவர்பூல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை நேற்று முடிவடைந்த நிலையில், சகோதரர்களின் குற்றம் நிரூபணமானது.

இதையடுத்து, முதன்மை குற்றவாளியான இளவரசனுக்கு 22 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்களும், இரண்டாவது குற்றவாளியான வினோதனுக்கு 18 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிப்பதாக நீதிபதி அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads