[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS கஜானாவை நோக்கி நாம் செல்லவில்லை; மக்களின் முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS பேருந்து கட்டண உயர்வை மனவருத்தத்தோடு மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்: வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS டிடிவி தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்- உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியுடனான 29 ஆண்டுகால கூட்டணியை முறித்துக் கொள்கிறது சிவசேனா
  • BREAKING-NEWS திடீரென APP மூலம் அரசியலில் நடிகர்கள் இறங்கியுள்ளனர்; அது அவர்களுக்கு ஆப்பாக தான் முடியும்- ஜெயக்குமார்
குற்றம் 03 Nov, 2016 02:21 PM

சென்னையில் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து 3 பெண்கள் படுகொலை

3-women-murder-in-last-one-week-at-chennai

சென்னையில் கடந்த ஒரே வாரத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்கள் 3 ‌பேர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவங்கள் வீட்டில் தனியாக வசிக்கும் முதியோர் மற்றும் பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் முதியோர்களை குறிவைத்து கடந்த ஒரு வாரமாக கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கடந்த திங்கள்கிழமையன்று தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டி சாந்தி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள். கண்காணிப்பு கேமராவில் கொலையாளிகளின் உருவம் பதிவாகியிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைக் கைப்பற்றி பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதே போல இந்த கொலை வழக்கு தொடர்பாக அடுத்தக் கட்ட விசாரணையை நோக்கி காவல்துறையினர் சென்று இருக்கிறார்கள்.

மூதாட்டி சாந்தியின் உறவினர்களிடம் விசாரிப்பதற்காக தனிப்படை போலீசார் பெங்களூரு சென்று இருக்கிறார்கள். இதற்கிடையில் நேற்று மேற்கு மாம்பலத்தில் பெண் வழக்கறிஞ‌ர் லட்சுமி சுதா என்பவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்பாகவே படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. வீடு பூட்டியிருந்த நிலையில் அழுகிய நாற்றம் வீசியதால் காவல்துறைக்கு பக்கத்து வீட்டினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து உடலை கைப்பற்றிய போலீசார், ராயப்பேட்டை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தக் கொலையை பொறுத்தவரையில் தெரிந்த நபர் கொலை செய்திருக்க வேண்டும் என்று விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டிற்கு யார், யார் வந்து செல்கிறார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் வழக்கறிஞ‌ர் லட்சுமி சுதாவின் செல்போனைக் கைப்பற்றி, யார், யார் பேசினார்கள் என்பது பற்றி விசாரித்து வருகிறார்கள்.

இதனிடையே இன்று ஆயிரம் விளக்கு பகுதியில் மக்கீஸ் கார்டன் என்ற பகுதியில் தனலெட்சுமி என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார், கடந்த ஒன்றாம் தேதி அவர் காணாமல் போயிருக்கிறார். இது தொடர்பாக அவரது கணவர் பழனி, ஆயிரம் விளக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், தனலட்சுமியின் உடலை அவரது வீட்டின் அருகே கண்டெடுத்தனர். தனலட்சுமி வீட்டு வேலை செய்து வரும் தொழிலாளி, அவரது கொலை தொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். அவரது கணவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே கணவர் புகார் கொடுத்த பிறகு வீட்டிற்கே வரவில்லை என்று அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளார்கள். அதன் அடிப்படையில் கணவர் மீது சந்தேகித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த மூன்று கொலைகளும் ஒரே வாரத்தில் நடந்திருக்கிறது. இந்த மூன்று கொலைகளை பார்க்கும் போது தனியாக இருக்கும் பெண்கள் தான் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அடுத்தடுத்து நடந்த இந்த கொலை சம்பவங்கள் வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியோர் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.

இந்நிலையில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் மற்றும் முதியோரின் பாதுகாப்பிற்காக நடவடிக்கை எடுத்துவருவதாக சென்னை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் 4,600 முதியோர்கள் தனியாக இருப்பதாக காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் சென்னையில் மட்டும் ஒரு லட்சம் முதியோர் தனியாக வசிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. எனவே முதியோர்கள் தாமாக முன்வந்து தகவல்களை பதிவு செய்ய காவல்துறை வேண்டுகோள் விடுவித்துள்ளது.

இதற்கிடையே முதியோர் பாதுகாப்பிற்காக தனியாக காவல் ஆய்வாளர் ஒருவரை நியமனம் செய்து சென்னை காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. முதியோர்கள் ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் உடனடியாக 1253 என்ற எண்ணில் அழைத்து தகவல் தெரிவிக்கலாம். காவல்துறை அதிகாரிகள் உடனடியாக நேரில் வந்து விசாரிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close