[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதிய 100 ரூபாய் நோட்டின் மாதிரியை வெளியிட்டது ஆர்பிஐ
  • BREAKING-NEWS பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது- முதலமைச்சர்
  • BREAKING-NEWS டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தார்மீக அடிப்படையில் திமுக முழு ஆதரவு- ஸ்டாலின்
  • BREAKING-NEWS கோவை: ஆழியார் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்ட உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: தான்டேவாடா- பிஜாப்பூர் எல்லைப்பகுதியில் நடந்த என்கவுன்டரில் 7 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 18,19 ஆம் தேதி டெல்லியில் நடக்கிறது

'டெஸ்ட் டியூப் பேபி'க்கு மறுப்பு.. மனைவியை விஷ ஊசி போட்டு கொலை செய்த கணவர்

put-lethal-injection-that-killed-her-wife-in-nammakal

‘டெஸ்ட் டியூப் பேபி’க்கு மறுப்பு தெரிவித்தால் மனைவியை விஷ ஊசி போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையை அடுத்த போத்தாக்காப்பட்டியைச் சேர்ந்த ராஜேஷ் மெடிக்கல் வைத்துள்ளார். இவருக்கும், நடுப்பட்டியைச் சேர்ந்த பிரியா என்ற பெண்ணுக்கும் கடந்த 2 வருடத்திற்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால், டெஸ்ட் டியூப் பேபி முறை மூலம், குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என பிரியாவிடம், ராஜேஷ் கூறியதாக தெரிகிறது. இதை ஏற்க மறுத்து வந்த நிலையில், ஐயத்திற்குரிய வகையில், பிரியா நேற்று வீட்டில் இறந்து கிடந்தார்.

அவரது உடலைக் கைப்பற்றிய போலீசார், ராஜேஷை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, டெஸ்ட் டியூப் பேபிக்கு பலமுறை வற்புறுத்தியும் அதை ஏற்காத காரணத்தால், விஷ ஊசி போட்டு கொன்றதாக, ராஜேஷ் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட ராஜேஷ், நீதிபதி மாலதி முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close