[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்
  • BREAKING-NEWS நெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
  • BREAKING-NEWS ஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா
  • BREAKING-NEWS தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி

சென்னை சொகுசுக்கார் விபத்து: விகாஸ் உள்ளிட்ட இருவரின் ஜாமீன் மனு தள்ளுபடி

porsche-car-accident-in-chennai-court-cancels-bail-plea-of-racer-vikas-anand

சென்னையில் சொகுசுக்காரை மதுபோதையில் இயக்கி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் தேசிய கார்பந்தய சாம்பியன் விகாஸ் உள்ளிட்ட இருவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னை கதீட்ரல் சாலையில் தாறுமாறாக ஓடிய சொகுசுக் கார் மோதி 12 ஆட்டோக்கள் சேதமடைந்தன. இந்த விபத்தில் திருத்தணியைச் சேர்ந்த ஆறுமுகம் என்ற ஆட்டோ ஓட்டுனர் உயிரிழந்தார். மேலும், 12 பேர் படுகாயமடைந்தனர். மது போதையில் இந்த விபத்தை ஏற்படுத்தியதாக தேசிய கார்பந்தய வீரரான விகாஸ் மற்றும் அவரது நண்பர் சரண் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது ஜாமீனில் வெளிவரமுடியாதபடி 5 வெவ்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்தநிலையில், கைதுசெய்யப்பட்ட விகாஸ் மற்றும் சரண்குமார் ஆகிய இருவரும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் இருவருக்கும் ஜாமீன் வழங்க அரசு தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. மதுபோதையில் விபத்தை ஏற்படுத்தியது உறுதி செய்யப்பட்டதாகவும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து குற்றம்சாட்டப்பட்ட இருவரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close