[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 22 ஆம் தேதி கல்லணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும்- அமைச்சர் துரைக்கண்ணு
  • BREAKING-NEWS நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நடைபெறும்
  • BREAKING-NEWS புதிய தலைமுறை செய்தி எதிரொலி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை நீர்தேக்க பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய 2 மினி லாரிகள் பறிமுதல்
  • BREAKING-NEWS புதுக்கோட்டையில் ஆளுநர் ஆய்வுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது
  • BREAKING-NEWS குமரி: பெருஞ்சாணி அணையில் உபரி நீர் திறப்பால் தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கான முன்னேற்ற திட்டங்களை ரஜினி ஆதரிக்கிறார்; அதற்கு நன்றி- தமிழிசை
  • BREAKING-NEWS டீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம் உயர்வை குறைக்கக்கோரி நாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் லாரிகள் வேலைநிறுத்தம்

ஒசூரில் விஷ்வ இந்து பரிஷத் மாவட்டச் செயலாளர் வெட்டிக் கொலை

vhp-functionary-hacked-to-death-by-gang-in-hosur

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட செயலாளர் சூரி என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்த சூரி, நேற்று மாலை ஒசூர் ரயில்நிலையம் அருகே உள்ள தனது அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அவரைச் சூழ்ந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்துவந்த போலீசார், படுகாயம் அடைந்திருந்த சூரியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதையடுத்து, ஏராளமான விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் மருத்துவமனையில் குவிந்தனர். பதட்டமான சூழல் ஏற்பட்டதால், நகரில் உள்ள அனைத்து கடைகளும் 8 மணிக்கே மூடப்பட்டன.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close