[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் தொகுதியில் பாஜக சார்பில் மேனகா காந்தி போட்டியிடுகிறார்
  • BREAKING-NEWS குக்கர் சின்னம் கிடைக்காத நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுபடி பொதுச்சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் டிடிவி தினகரன் மனு
  • BREAKING-NEWS காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும்; கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் கொடுத்ததில் தவறில்லை - காங்கிரஸ் தேனி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன்
  • BREAKING-NEWS 2ம் கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறும் தமிழகம். புதுச்சேரி உள்ளிட்ட 97 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பு மனுத்தாக்கல் நிறைவு
  • BREAKING-NEWS டிடிவி தரப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவை மற்ற வழக்குகளுக்கு முன்மாதிரியாக கருதக்கூடாது என்ற ஆணையத்தின் கோரிக்கை நிராகரிப்பு
  • BREAKING-NEWS டிடிவி தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS பொள்ளாச்சி கொடூரம்: புகார் அளித்த பெண்ணின் அண்ணனை தாக்கிய வழக்கில் 28ம் தேதி விசாரணைக்கு ஆஜராக பார் நாகராஜனுக்கு சிபிசிஐடி போலீஸ் சம்மன்

சென்னையில் தாறுமாறாக ஓடிய சொகுசுக்கார் மோதி ஒருவர் உயிரிழப்பு: குடிபோதையில் காரை ஓட்டிய நபர் கைது

drunk-22-yr-old-in-porsche-car-in-chennai-rams-into-parked-autos-kills-auto-driver

சென்னை கதீட்ரல் சாலையில், இளைஞர் ஒருவ‌ர் குடிபோதையில் சொகுசு கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் விகாஷ் ஆனந்த் என்பவரும் அவரது உறவினர் சரண்குமாரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான விகாஷ் ஆனந்த், நடப்பாண்டின் தேசிய கார் பந்தய சாம்பியன் என தெரியவந்துள்ளது. நள்ளி‌ரவி‌ல் தாறுமாறாக ‌காரை ஓட்டிய விகாஷ், கதீட்ரல் சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆட்டோக்கள் மீது மோதி‌னார். இதில், ஒருவர் உயிரிழந்தார். காயமடைந்த 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விபத்தில்10 ஆட்டோக்கள் சேதமடைந்தன. விகாஷிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு‌ நடத்தினர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close