[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்
  • BREAKING-NEWS நெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
  • BREAKING-NEWS ஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா
  • BREAKING-NEWS தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி

கரூரில் பொறியியல் கல்லூரி மாணவி வகுப்பறையில் அடித்துக் கொலை... முன்னாள் மாணவர் கைது

engineering-student-killed-in-classroom

கரூர் மாவட்டம் கொடுமுடியில் பொறியியல் கல்லூரி மாணவி சோனாலியை அதே கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர் உதயகுமார் வகுப்பறையில் நுழைந்து படுகொலை செய்தார். ஒருதலை காதலால் இந்த படுகொலை நிகழ்ந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் காலை 10 மணிக்கு நோட்டு புத்தக சகிதமாக வகுப்பறைக்கு சென்றார் பொறியியல் மாணவி சோனாலி.அரைமணி நேரம் கழித்து, கையில் ஒரு ‌கட்டையுடன் வகுப்பறைக்குள் நுழைந்த முன்னாள் மாணவன் உதயகுமார், சோனாலியை தலை பகுதியில் கடுமையாக தாக்கினார்.

இதனால் சக மாணவர்கள் அதிர்ச்சியுடன் அலறினர். ரத்த வெள்ளத்தில் மிதந்த மாணவி சோனாலியை சக மாணவர்கள், கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.ஆபத்தான நிலையில் இருந்த மாணவி, மதுரைக்கு கொண்டு செல்லப்பட, தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட சோனாலி மாலை 3 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பரமக்குடியைச் சேர்ந்த உதயகுமாரை ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டதாக கூறி கல்லூரி நிர்வாகம் பல முறை இடைநீக்கம் செய்துள்ளது. கடந்த ஆண்டு முறையான வருகைப் பதிவேடு இல்லாததால் உதயகுமார் படிப்பை நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close