[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்

ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட 'ஜோக்கர்': டிவிடியில் பார்த்த ரசிகர்கள் வங்கி கணக்கில் பணம் செலுத்தினர்

jokker-film

‘ஜோக்கர்’ படத்தை திருட்டு டிவிடியில் பார்ப்பவர்கள், அதற்கான நியாயமான தொகையை இந்த வங்கி கணக்கில் செலுத்தும்படி வங்கி கணக்கைக் குறிப்பிட்டு விளம்பரப்படுத்தினார்கள். இதன் விளைவாக டிவிடியில் பார்த்த ரசிகர்கள் வங்கி கணக்கில் பணம் செலுத்தி வருகின்றனர்

ராஜூமுருகன் இயக்கத்தில் சோமசுந்தரம், ரம்யா பாண்டியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘ஜோக்கர்’. ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கும் இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. மக்களின் மனதை கொள்ளை கொண்ட இப்படம் பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறது. ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் போன்ற நடிகர்களும் இப்படத்தை பார்த்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ‘ஜோக்கர்’ படத்தை டிவிடியில் பார்த்த ரசிகர்கள் வங்கிக் கணக்கில் இதுவரை ரூ.5 ஆயிரத்துக்கும் அதிகமாக பணம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் தயாரிப்பாளர் தரப்பில் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த படம் தோல்வி அடைய கூடாது என்று ரசிகர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியதே, இப்படத்தின் வெற்றி என தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close