[X] Close
JUST IN
  • BREAKING-NEWS முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்
  • BREAKING-NEWS குன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தலில், இலங்கை பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச முன்னிலை

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு.... தர்மதுரை படத்தின் உணர்ச்சிமிகு பிரஸ்மீட்

vijay-sethupathi-seenu-ramasamy

செஞ்சோற்று கடன் தீர்ப்பது என்பது சினிமாவில் அரிதான நிகழ்வாகிப் போன ஒன்று. ஏனெனில் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைபவர்கள், வாய்ப்பு கிடைத்த பின், யார் அதற்கு காரணமோ அவர்களை மறந்துவிடுவார்கள். அப்படிப்பட்ட நிலையில் நடிகர் விஜய் சேதுபதியும், சீனு ராமசாமியும்... நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு என்று பாட்டுப்பாடாத குறையாக மாறி மாறி புகழ்ந்தனர். அதனை இப்போது பார்ப்போம்.

சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்டு வளர்ந்த ஹீரோக்களில் விஜய் சேதுபதி முக்கியமானவர். சிறுசிறு வேடங்களில் நடித்து கொண்டு வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்த விஜய் சேதுபதியை தென்மேற்கு பருவக்காற்று படத்தில் ஹீரோவாக அறிமுகம் செய்தார் சீனுராமசாமி. இந்நிலையில் சீனு இயக்கிய ‘இடம் பொருள் ஏவல்’ திரைப்படம் ஒருசில பிரச்சனைகளால் வெளிவர முடியாமல் இருந்தது. இதனால் மிகவும் கடினமான சூழலில் இருந்த அவருக்கு, விஜய் சேதுபதி கால்ஷீட் கொடுத்து கைதூக்கிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக சீனுராமசாமி ‘தர்மதுரை’ படத்தின் பிரஸ்மீட்டில் கூறியபோது, ‘அப்பாக்கள் பிள்ளைகளை கை பிடித்து அழைத்துக் கொண்டு போய் கிரவுண்டுக்குள் இறக்கிவிடுவார்கள். குழந்தை வளர்ந்து அப்பாவை கை பிடித்து அழைத்துச் சென்று கிரவுண்டுக்குள் இறக்கிவிட்டால் எப்படியிருக்கும்? அப்படியிருக்கிறது எனக்கு. நான் இயக்கிய ‘இடம் பொருள் ஏவல்’ படம் வெளிவராமல் நின்று விட்டது. இந்த நேரத்தில் என்னை அழைத்து இந்த வாய்ப்பை வாங்கிக் கொடுத்திருக்கிறார் விஜய் சேதுபதி. இன்று அவர் இருக்கும் உயரத்திற்கு என்னை நினைத்துப் பார்க்க வேண்டிய அவசியமேயில்லை” என்றார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக விஜய் சேதுபதி பேசுகையில் ‘, ‘நான் சினிமாவில் ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்காதா? என்று கஷ்டப்பட்டு கொண்டிருந்த நேரத்தில் எனக்கு நம்பிக்கை கொடுத்தவர்தான் சீனுராமசாமி. எனக்கு மட்டுமின்றி என் மனைவிக்கும் தைரியம் கூறி கண்டிப்பாக ஒருநாள் நான் நல்ல நிலைமைக்கு வருவேன்’ என்று ஆசி வழங்கியதோடு அவ்வப்போது எனக்கு பண உதவியும் செய்தவர்’ என்று தனது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close