[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தண்ணீர் பிரச்னைக்காக திமுக அறிவித்துள்ள போராட்டம் ஒரு கபட நாடகம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS ஜூன் 24ம் தேதி காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத்தில் இருந்து 53 உறுப்பினர்களை நீக்கிய நடைமுறை சரியே - சென்னை உயர்நீதிமன்றம்

மலேசியாவில் கிளைமாக்ஸ் மாறிய கபாலி ?

kabali-climax-in-malaysia

ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரஜினியின் கபாலி படம் நேற்று வெளியானது. படம் வெளியாவதற்கு முன்பு இருந்ததைவிட வெளியானதற்கு பின் ரசிகர்கள் மத்தியில் அந்த அளவில் உற்சாகம் தென்படவில்லை. பலவித விமர்சனங்கள் கலவையாக வருகிறது. குறிப்பாக, ரஜினியை இன்னும் கொஞ்சம் அழகாக இயக்குனர் காட்டியிருக்கலாம், இசை இன்னும் கொஞ்சம் எடுப்புடன் இருந்திருக்கலாம் என ரஜினி ரசிகர்கள் எண்ணுவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் வேறு ஒரு புது செய்தியாக, மலேசியாவில் கபாலி பட கிளைமாக்ஸ் வேறு விதமாக காட்டப்பட்டுள்ளதாக செய்திகள் பரவிய வண்ணம் உள்ளது. அதாவது, இந்தியாவில் வெளியான கபாலி படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வேறு விதமான முடிவையும், மலேசியாவில் வெளியான படத்தில் வேறு விதமான கிளைமாக்ஸ் காட்சியையும் காட்டியுள்ளதாக தெரிகிறது.

அதாவது மலேசியாவில் வெளியான கபாலி கிளைமாக்ஸில், “கபாலி போலீஸில் சரணடைந்தார்” என்ற வாசகம் இடம் பெற்றுள்ளதாம். இதனால் இந்தியாவுக்கு ஒரு மாதிரியும், மலேசியாவுக்கு ஒரு மாதிரியும் முடிவு வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close